- Home
- Cinema
- தொலைக்காட்சி
- 5 வருஷமோ, 10 வருஷமோ – கண்ணீர் விட்டு கதறி அழும் மாரி; குமரவேல் ஜெயிலுக்கு போவது உறுதியா?
5 வருஷமோ, 10 வருஷமோ – கண்ணீர் விட்டு கதறி அழும் மாரி; குமரவேல் ஜெயிலுக்கு போவது உறுதியா?
Arasi Case Judgement Will Come against Kumaravel : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 584ஆவது எபிசோடில் குமரவேல் ஜெயிலுக்கு செல்வதற்கான நேரம் நெருங்கி விட்டது.

ஜெயிலுக்கு செல்லும் குமரவேல்
Arasi Case Judgement Will Come against Kumaravel : குமரவேலுவிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருந்துள்ள நிலையில் இப்போது ஜெயிலுக்கு செல்வதற்கான நேரமும் நெருங்கிவிட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 584ஆவது எபிசோடில் குமரவேல் தொடர்பான காட்சிகளுடன் எபிசோடு தொடங்குகிறது. இதில், குமரவேலுவின் அம்மா மாரி அவனுக்கு நெற்றியில் விபூதி வைத்து விடுகிறார். ஒரு இட்லி கூட முழுவதுமாக சாப்பிடாத குமரவேலுவிற்கு வடிவு சாப்பிட வேறு ஏதாவது எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றார்.
பேரனுக்கு பாசமா இட்லி ஊட்டிவிட்ட காந்திமதி
காந்திமதி இட்லி ஊட்டி விட்டார். குமரவேல் இட்லி போதும் என்று எழுந்து செல்ல, மாரி கதறி அழுதார். அப்போது, அவர் 5 வருஷமோ, 10 வருஷமோ தண்டனை கொடுக்க போறாங்களே. ஆசை ஆசையாக பெத்து வளர்த்த என்னுடைய புள்ள இப்போ ஜெயிலுக்கு போக போறானே என்று கதறி அழுதார். அதன் பிறகு வடிவு ராஜீயிடம் சென்று தனது அண்ணனுக்காக இந்த கேஸை வாபஸ் பெற சொல்லுமாறு கேட்டார்.
மகளிடம் கெஞ்சிய அம்மா,
இதே போன்று காந்திமதியும் தனது மகள் கோமதியிடம் சென்று புகாரை வாபஸ் பெற சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். ராஜீயிடம் ஏற்கனவே மாரி கெஞ்சி கூத்தாடிய போதிலும் அவர் அசருவதாக தெரியவில்லை. காலில் கூட விழ முயற்சி செய்தார். ஆனால், ராஜீ அசரவே இல்லை. இது குறித்து ராஜீ வீட்டில் பேச இருந்ததாக சொன்ன நிலையில், கோமதி தனது கணவரிடம் பேச ஆரம்பித்தார். அவர் ஆரம்பிப்பதற்குள்ளாக சரவணன், கதிர் முடியவே முடியாது என்று கூற, பாண்டியனும் கோபத்தில் முடியாது என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
ஆனால், கோமதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அண்ணன் மகன் என்ற பாசம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரே ஒரு மகன் ஜெயிலுக்கு போக போகிறான் என்ற வருத்தமும் இருந்தது. மேலும், தனது அம்மா தன்னிடம் வந்து இதைப் பற்றி பேசியதாகவும் கூறினார். இதையெல்லாம் தாண்டி, சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் கதறி அழும் காட்சிகள் தான் இன்றைய எபிசோடில் நடந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
அதோடு இன்றைய எபிடோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்பது பற்றி நாளைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம். குமரவேல் ஜெயிலுக்கு செல்வாரா அல்லது பாண்டியன் மற்றும் அரசி இருவரும் சேர்ந்து அந்த வழக்கை வாபஸ் பெறுவார்களா என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்வோம். மேலும், அரசி மற்றும் குமரவேல் மீண்டும் காதலித்து திருமணம் செய்யவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அது கூடிய விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.