MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பண்டிகை தினத்தை டார்கெட் செய்யும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... விரைவில் வருகிறது மாஸான அப்டேட்

பண்டிகை தினத்தை டார்கெட் செய்யும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... விரைவில் வருகிறது மாஸான அப்டேட்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 09 2022, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீசாகின. அதில் லைகா நிறுவனம் தயாரித்திருப்பில் அவர் நடித்த டான் படம் கடந்த மே மாதம் ரிலீசானது. சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
maaveeran

maaveeran

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி விருந்தாக வந்த படம் தான் பிரின்ஸ். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் படு தோல்வியை சந்தித்தது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார் சிவகார்த்திகேயன். இப்படம் தோல்வி அடைந்ததால் அடுத்ததாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எஸ்.கே.

இதையும் படியுங்கள்.... யம்மாடியோ... ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா? சம்பள விவரத்தை சொன்ன மைனா... ஷாக் ஆன தனலட்சுமி

34

அந்த வகையில் அவர் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் படம் மாவீரன். இப்படத்தை மண்டேலா படத்தை இயக்கி இரண்டு தேசியவிருதுகளை வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். அதேபோல் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து வருகிறார்.

44

விறுவிறுப்பாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்த சில அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இப்படத்தை வருகிற 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக்குழு, இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை வருகிற டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.

இதையும் படியுங்கள்.... கல்யாணம் முடிந்த கையோடு கணவருக்கு அல்வா கொடுத்த ஹன்சிகா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved