MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • sivakarthikeyan :சிவகார்த்திகேயனின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் நெல்சன்! வேறமாரி சம்பவத்துக்கு ரெடியான எஸ்.கே

sivakarthikeyan :சிவகார்த்திகேயனின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் நெல்சன்! வேறமாரி சம்பவத்துக்கு ரெடியான எஸ்.கே

sivakarthikeyan : டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்காலிகமாக எஸ்.கே.20 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 04 2022, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ரிலீசுக்கு ரெடியான டான்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது டான், அயலான் போன்ற படங்கள் தயாராகி உள்ளன. இதில் டான் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பிரம்மாண்டமாக உருவாகும் அயலான்

அதேபோல் அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

34

டோலிவுட்டில் அறிமுகமாகும் எஸ்.கே

இதுதவிர டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்காலிகமாக எஸ்.கே.20 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.; இப்படம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

44

ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயன்

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் இயக்க உள்ள இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகனான சிவகார்த்திகேயன் தற்போது அவருடனே நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... Ram charan : என்ன ஒரு தங்கமான மனசு! RRR படக்குழுவினருக்கு 10 கிராம் தங்கக்காசு பரிசளித்தார் ராம்சரண்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image2
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image3
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved