சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!
நடிகர் சிவகார்த்திகேயன் மகன் ஆராதனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று, தற்போது வெளியாகி அனைவரையுமே ஆச்சர்யப்படவைத்துள்ளது.
சின்னத்திரையில் போட்டியாளராக காலடி எடுத்து வைத்து, பின்னர் தொகுப்பாளர், நடிகர் என பல்வேறு கஷ்டங்களை கடந்து, முன்னணி நடிகராக வளர்த்திருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவர்னாடிக்கும் படங்கள் அனைத்துமே , பெரியவர்களை தாண்டி குழந்தைகளை மிகவும் கவர்ந்து விடும். தற்போது நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார் சிவா.
அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், உள்ளிட்டோர் நடித்திருந்த 'கனா' படத்தை நடித்து தயாரித்தும் இருந்தார் சிவகார்த்திகேயன். திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றிருந்த வாயாடி பெத்த புள்ள என்கிற பாடலை சிவகார்த்திகேயன் மகள், ஆராதனா தன்னுடைய மழலை குரலால் பாடி இருந்தார்.
2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலின் லிரிக் வீடியோ இன்றுடன் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா பாடல்களிலேயே 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 3வது பாடல் என்ற பெருமை கிடைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மளமளவென வளர்ந்து குட்டி தேவதை போல மிளிர்கிறார்.
சிவகார்த்திகேயன் மனைவி மற்றும் மகளுடன் திருமண விசேஷம் ஒன்றில் கலந்து கொண்டபோது, இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.