3ஆவது மகனுக்கு காது குத்திய சிவகார்த்திகேயன் – குலதெய்வ கோயிலில் குவிந்த மக்கள்!
Sivakarthikeyan 3rd Son Pavan Ear Pierced Function : திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையில் உள்ள குலதெய்வ கோயிலில் சிவகார்த்திகேயன் தனது 3ஆவது மகன் பவனுக்கு காது குத்தும் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்.

3ஆவது மகனுக்கு காது குத்திய சிவகார்த்திகேயன் – குலதெய்வ கோயிலில் குவிந்த மக்கள்!
Sivakarthikeyan 3rd Son Pavan Ear Pierced Function : சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து சிவகார்த்திகேயன் தனுஷ் நடித்த 3 படத்தில் அவருடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு சூரி மற்றும் சிவகார்த்திகேயன் காம்போவில் ஒரு சில காமெடி மூவிஸ் வெளிவர அந்த படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
3ஆவது மகனுக்கு காது குத்திய சிவகார்த்திகேயன்
அதில் ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் அடங்கும். ஒரு நடிகரையும் தாண்டி பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என்று தன்னை மேலும் மெருகேற்றிக் கொண்டார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் வந்த எந்த படமு ரூ.150 கோடிக்கு மேல் வசூல் குவிக்காத நிலையில் அவருக்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமரன் அமைந்தது. அவரை சினிமாவின் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.
சிவகார்த்திகேயன் 3ஆவது மகன் பவண் காதணி விழா
இப்போது பராசக்தி என்ற படத்திலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். சினிமாவை தாண்டி குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் சிவகார்த்திகேயன் தனது மாமா மகளான ஆர்த்தியை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு முதலாவதாக ஆராதனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது மகள் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் குல தெய்வ கோயில்
அதன் பிறகு குகன் தாஸ் என்ற மகன் பிறந்த நிலையில் 3ஆவதாக பவன் என்ற மகன் பிறந்தான். ஏற்கனவே தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டிருந்த சிவகார்த்திகேயன் இப்போது தனது 3ஆவது மகனுக்கு சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையில் உள்ள குலதெய்வ கோயிலில் காதணி விழா நடத்தியுள்ளார்.
சிவகார்த்திகேயன் மகனுக்கு காதணி விழா
மகா மாரியம்மன் என்ற குலதெய்வ கோயிலில் சிவகார்த்திகேயன் தனது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சூழ தனது 3ஆவது மகன் பவனுக்கு காதணி விழா நடத்தியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெரினா படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களையும், ஒரு சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். அதில் அமரன் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட் கொடுத்துள்ளார்.
இந்தப் படம் கொடுத்த வரவேற்பு இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 25ஆவது படமான பராசக்தி என்ற படத்திலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் முருகன் கோயிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.