- Home
- Cinema
- டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
From Dubbing Artist to Mass Hero Chiyaan Vikram Success Story : தமிழ் சினிமாவில் அப்பாஸ், அஜித் குமார், பிரபு தேவா போன்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்த விக்ரமின் சினிமா போராட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
From Dubbing Artist to Mass Hero Chiyaan Vikram Success Story : நடிகர் விக்ரம் திரையுலகில் ஒரு முன்னணி இடத்தைப் பிடிக்க 1990 முதல் 1999 வரை சுமார் 10 ஆண்டுகள் கடும் போராட்டங்களைச் சந்தித்தார். சிறிய வேடங்கள், தோல்விப் படங்கள் மற்றும் கடுமையான பண நெருக்கடிக்கு இடையே, திரைப்பட வாழ்க்கையிலும் வெற்றி இல்லாமல் ஏதோ சோகமாகவே அவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.தமிழ் திரை உலகில் மிக நீண்ட போராட்டத்திற்கு பின் சினிமாவில் கால் பதித்தார் நடிகர் விக்ரம் அவரது போராட்டம் மற்றவருக்கு விக்ரம் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.காலத்துக்கேற்ற ட்ரெண்டை பிடித்து விக்ரம் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவேண்டும் என உறுதியாக இருந்தார்.
சீயான் விக்ரம் வெற்றிப் பயணம்
ஆரம்ப காலம: 1990-ல் என் காதல் கண்மணி திரைப்படத்தில் அறிமுகமானார், ஆனால் துர்த்ஷ்டமாக அந்த படம் தோல்வியில் அடைந்தது அதற்கு அடுத்து பல படங்கள் தோல்வியடைந்தன. தமிழ்த் திரையுலகில் வாய்ப்புகள் குறைந்ததால், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.
விபத்து மீண்டு வருதல்:
1994-ல் ஒரு விபத்தில் விக்ரம் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டார் அதனால் அவர் காலில் அடிபட்டது.காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்தார். மருத்துவர்கள் காலை எடுக்க வேண்டும் என்று கூறிய நிலையிலும், மன உறுதியுடன் மீண்டு வந்தார். அவரது வலது காலில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது அவரால் காலையில் மடக்க முடியாது ஆனால் சினிமாவில் அனைத்து ஆக்சன் சீன்களிலும் அவர் மிகவும் அருமையாக நடித்து இருப்பார். டான்ஸ்,வாக் ,ரன்னிங் என்று அனைத்திலும் அவர் மிகவும் அருமையாக நடித்திருப்பார்.
விக்ரமிற்கு தேடி வந்த வாய்ப்பு:
வாய்பிற்காக தேடிக் கொண்டிருக்கும் பொழுது இதற்கிடையில் முன்னாடி நடிகர்களான பிரபுதேவா, அஜித் போன்றவர்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார் விக்ரம். அந்த சமயத்தில் தான் பாலா விக்ரமை தேடி வந்தார். அதன் பிறகு தான் விக்ரமின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இன்று முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் நடிகர் விக்ரம்.
Vikram before Sethu movie,
இந்த படத்தில் கதாபாத்திரத்தின் பெயர் சீயான் அந்த பெயர் மிகவும் தமிழ் சினிமாவில் பிரபலமானது. அந்தப் படத்தில் சீயானுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருப்பார். அதனால் இந்த பெயர் மிகவும் பிரபலமானதால் முதல் படத்தில் முதல் பெயர் என்பதாலும் இவருக்கு அடைமொழியாக சியான் விக்ரம் என்று பெயர் வந்தது அதன் பிறகு தமிழ்நாட்டில் சியான் விக்ரம் என்று மிகுந்த வரவேற்பு பெற்று வந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.