சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி வழக்கு; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்வதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

படம் தயாரிக்க துஷ்யந்த் வாங்கிய கடன்:
நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு. இதில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் போதுமான வாய்ப்புகள் இல்லாத நிலையில், பட தயாரிப்பில் ஈடுபட்டார். அப்படி அவர் தயாரித்த படம் தான் ஜகஜால கில்லாடி. இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சுமதி, யோகி பாபு, நிவேதா பெத்துராஜ், மொட்ட ராஜேந்திரன், ராதா ரவி, நளினி ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
Thanabakiyam Filed Case:
தனபாக்கியம் நிறுவனம் தொடர்ந்த வழக்கு:
இந்த படத்தை எடுக்க தனது மனைவியுடன் இணைந்து தனபாக்கியம் என்ற நிறுவனத்திடம் பணம் பெற்றிருக்கிறார் துஷ்யந்த். ஆனால் உரிய நேரத்திற்குள்ளாக அந்த பணத்தை திருப்பி தரவில்லை. இதன் காரணமாக அந்த நிறுவனம் துஷ்யந்த் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிவாஜிக்கு சொந்தமான அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
தமிழ் சினிமாவின் தலைமைச் செயலகமாக இருந்த ‘அன்னை இல்லம்’! சிவாஜி வீட்டின் பிரம்மிக்க வைக்கும் வரலாறு!
Sivaji Ganesan House:
சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவு:
சிவாஜியின் அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது. ஆதலால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பிரபு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தனது தந்தை இருக்கும் போது அன்னை இல்லத்தை தனது பெயரில் மாற்றிவிட்டார். அன்னை இல்லத்தில் ராம்குமாருக்கு உரிமை இல்லை. அப்படியிருக்கும் போது அன்னை இல்லத்தை எப்படி ஜப்தி செய்ய முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.
Annai Illam Confiscation case Court New Order
ஜப்தி உத்தரவை நீக்க உத்தரவு:
இந்த நிலையில் தான் நடிகர் பிரபு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதில், நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தை உரிமையாளர். அதனால், ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பிரபுவிற்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும், சிவாஜி கணேசனின் ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
அன்னை இல்லம் என்னோடது; ஜப்தி உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு மனு