TRP ரேஸில் டம்மி பீஸ் ஆன எதிர்நீச்சல் 2! இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
சன் டிவியில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் 2 சீரியல் இந்த வாரம் டிஆர்பியில் சரிவை சந்தித்துள்ளதோடு, டாப் 10 சீரியல் பட்டியலிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
Ethirneechal 2
சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதால் அதன் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி முன்பெல்லாம் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பான சீரியல்கள், பின்னர் 6 நாட்களாகி தற்போது வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் நிலை உருவாகி இருக்கிறது. அதேபோல் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் மட்டும் தான் ஒளிபரப்பாகும். ஆனால் தற்போது அன்றைய தினங்களில் கூட சீரியல்கள் ஒளிபரப்பப்படும் சூழல் உருவாகி உள்ளது.
serial TRP
இப்படி தினந்தோறும் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை கண்டறிய ஒவ்வொரு வாரமும் டிஆர்பி நிலவரத்தை பார்க் வெளியிடும். அந்த வகையில் 53வது வாரத்திற்கான டிஆர்பி நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.66 டிஆர்பி புள்ளிகளுடனும், பாக்கியலட்சுமி சீரியல் 6.84 டிஆர்பி புள்ளிகளுடனும் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
இதையும் படியுங்கள்... முத்துக்குமரன் உடன் காதலா? என்ன சாச்சனா பொசுக்குனு இப்படி சொல்லிட்டாங்க!
Top 10 Tamil Serial
அதேபோல் சன் டிவியில் அண்மையில் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் 2 சீரியல் கடந்த வாரம் 8.01 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 7.16 புள்ளிகளை மட்டுமே பெற்று கடும் சரிவை சந்தித்து உள்ளது. டாப் 10 பட்டியலில் இந்த சீரியல் 8ம் இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக அன்னம் சீரியல் 8.31 புள்ளிகளுடன் 7ம் இடத்தை தக்கவைத்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் இராமாயணம் தொடர் 8.59 டிஆர்பி புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது.
Top 10 Tamil Serial TRP Rating
முதல் ஐந்து இடங்களில் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்து இருந்தாலும், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் கெத்தாக 8.87 டிஆர்பி புள்ளிகளை பெற்று 5ம் இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல், இந்த வாரம் 9.01 புள்ளிகளுடன் 4ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 9.76 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் 9.86 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த கயல் சீரியல் இந்த வாரம் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது. கயல் சீரியலுக்கு 10 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.
இதையும் படியுங்கள்... டைட்டில் கனவோடு இருந்தவரை மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற்றிய பிக் பாஸ்!