முத்துக்குமரன் உடன் காதலா? என்ன சாச்சனா பொசுக்குனு இப்படி சொல்லிட்டாங்க!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரனுக்கும், ஜாக்குலினுக்கும் இடையே காதல் இருப்பதாக சாச்சனா கூறியதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
Muthukumaran, Jacquline, Sachana
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஜோடிகள் உருவாவது சகஜம் தான். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பிக் பாஸ் நிகழ்ச்சியில், பல காதல் ஜோடிகள் உருவாகின. அதில் அதிக ஹைலைட்டாக பேசப்பட்டது, விஷாலின் காத்துவாக்குல ரெண்டு காதல் தான். முதலில் விஷாலை தர்ஷிகா காதலித்தார்.
Bigg Boss Tamil season 8
விஷால் மீது காதலில் விழுந்ததில் இருந்தே தர்ஷிகாவின் கேம் டவுன் ஆனது. பின்னர் அவரை எலிமினேட் செய்து வெளியே அனுப்பினர். தர்ஷிகா எலிமினேட் ஆனதும் விஷால் மீது அன்ஷிதா காதல் வயப்பட்டார். பின்னர் அவரும் எலிமினேட் ஆனார். இந்த இருவரின் எலிமினேஷனுக்கும் விஷால் தான் காரணம் என்கிற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், தான் இருவரையுமே காதலிக்கவில்லை என்று விஷால் தற்போது உள்ளே வந்து எக்ஸ் போட்டியாளர்களிடம் கூறி வருவது தான் செம ட்விஸ்டாக பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... உண்மையான உணர்வு; காதலை காமெடியாக்கிய விஷால்? காத்திருக்கும் சம்பவம் தர்ஷிகா போட்ட பதிவு!
Jacquline, Muthukumaran
பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள போட்டியாளர்கள் வெளியே நடக்கும் விஷயங்களை அள்ளி வீசி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக பிக் பாஸ் வீட்டுக்குள் யார் யாரெல்லாம் காதலர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி சாச்சனா சக போட்டியாளர்களிடம் கூறினார். அதில் தனக்கும் ஜெஃப்ரிக்கும் இடையே காதல் இருப்பதாக கூறி சில வீடியோக்கள் வெளியானதாக கூறிய அவர், ஜாக்குலினுக்கும் முத்துக்குமரனுக்கும் இடையே காதல் இருப்பதாக பல வீடியோக்கள் வெளிவந்ததை சுட்டிக்காட்டினார்.
Jacquline
இதோடு நிற்காமல், ஜாக்குலின், முத்துக்குமரனிடம் பேசப் போகும் போதெல்லாம் இடையே சென்று உங்களை காதலிக்க விடமாட்டேன் என்று கூறி வந்திருக்கிறார். இதனால் டென்ஷன் ஆன ஜாக்குலின் தீபக்கிடம் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார். முத்து எனக்கு தம்பி மாதிரி, என்னைவிட 3 வயசு சின்ன பையன் அவ, அவனைப்போய் நான் எப்படி காதலிப்பேன். சாச்சனாவுக்கு மெச்சூரிட்டியே இல்லாம நடந்து கொள்கிறாள் என்று சொல்லி கண்ணீர்விடாத குறையாக பேசி உள்ளார் ஜாக்குலின்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டுக்குள் கன்ஃபாம் ஆன காதல்! சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? விஷ்ணு உடைத்த ரகசியம்!