- Home
- Cinema
- 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பார்ட் - ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்!
'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பார்ட் - ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்!
Siragadikka Aasai Actress New Entry in Superhit serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து வரும் நடிகை , புதிய தொடரில் நடிக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் சிறகடிக்க ஆசை:
விஜய் டிவியில் பல ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட தொடராக உள்ளது 'சிறகடிக்க ஆசை'. கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், வெற்றி வசந்த் ஹீரோவாகவும், கோமதி ப்ரியா நாயகியாகவும் நடித்து வருகின்றனர். எஸ் குமரன் என்பவர் இயக்கி வருகிறார். விகடன் நிறுவனம் தான் இந்த தொடரை தயாரித்து வருகிறது.
TRP-யில் கெத்து காட்டி வரும் தொடர்:
மேலும் இந்த சீரியலில், ஆர் சுந்தர்ராஜன், அனிலா குமார், சல்மா அருண், ஸ்ரீ தேவா, ப்ரீத்தா ரெட்டி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் TRP-யில் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ள இந்த தொடரில் நடிக்கும் நடிகை ஒருவர், மற்றொரு ஹிட் சீரியலில் நடிக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாம் பாகம் சீரியல்கள்:
பொதுவாக, எந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பு கிடைக்கிறதோ... அந்த சீரியலில் இரண்டாம் பாகத்தை எடுப்பதை விஜய் டிவி வழக்கமாக வைத்துள்ளது. ஏற்கனவே சரவணன் மீனாட்சி, கனாக்காணும் காலங்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில், மதிய நேர தொடரான 'சக்தி வேல்' சீரியலின் இரண்டாம் பாகவும் துவங்கப்பட்டது.
சுதா புஷ்பா நியூ என்ட்ரி:
முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்து வந்த பிரவீன் ஆதித்யா இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது விக்ரம் ஸ்ரீ ஹீரோவாக நடித்து வருகிறார். நாயகியாக முதல் பாகத்தில் நடித்த அஞ்சலி பாஸ்கர் தான் நடித்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் 'சக்தி வேல்' சீரியலில் இரண்டாம் பாகம் துவங்கப்பட்ட நிலையில், இந்த சீரியலில் முக்கிய துணை கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளார். அதாவது அன்பு செழியன் அம்மாவாக நடித்து வந்தவர் விலகியதால், அவருக்கு பதிலாக சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் அம்மாவாக நடித்து வரும் சுதா புஷ்பா நடிக்க உள்ளாராம்.