- Home
- Cinema
- Jonita Gandhi : நீங்க டிரஸ் போட்டு இருக்கீங்களா? பார்த்ததுமே பதறிடுச்சு! பாடகி ஜோனிதா காந்தி கிளக்ஸ்
Jonita Gandhi : நீங்க டிரஸ் போட்டு இருக்கீங்களா? பார்த்ததுமே பதறிடுச்சு! பாடகி ஜோனிதா காந்தி கிளக்ஸ்
பிரபல பாடகி ஜோனிதா காந்தி (Jonita Gandhi) ஸ்கின் கலர் உடையில்... உடை போட்டிருப்பதே தெரியாத அளவுக்கு உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இளம் நெஞ்சங்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.

32 வயது ஆகும் ஜொனிதா காந்தி ஒரு இந்தோ-கனடிய பாடகி. இவர் இதுவரை ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
டெல்லியில் பிறந்த ஜொனிதா, தன் ஏழு வயதிலேயே கனடா செல்ல நேர்ந்தது, அங்கு டொராண்டோ மற்றும் பிராம்ப்டனில் வாழ்ந்து வந்தாலும், இவர் ஒரு பொழுதுபோக்கு இசைக்கலைஞராக விளங்கியதால், சிறுவயதிலேயே ஜொனிதாவின் பாடல் திறமையை கண்டறிந்து அவரது குடும்பத்தினர் ஊக்கப்படுத்தியதால் இன்று ஒரு பாடகியாக வலம் வருகிறார்.
1995 இல் டொராண்டோவில் ஜொனிதா தனது முதலாவது இசை நிகழ்ச்சியை நடத்தினார். பாடலில் மட்டும் இன்றி படிப்பிலும் ஜோனிதா கெட்டி தான். சுகாதார அறிவியல் மற்றும் வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
மேற்கத்திய பாரம்பரிய இசையில் மட்டுமன்றி, இந்துஸ்தானி இசையிலும் அவர் எடுத்து வந்த பயிற்சி அவரது இசை வாழ்க்கையைத் தொடங்க பேருதவி புரிந்தது.
ஜொனிதா காந்தி தன்னுடைய 17 வயதில் இணையத்தில் பதிவேற்றிய காணொளிகள் அவருக்குப் பெரும்புகழை ஈட்டிக்கொடுத்தது. சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பையும் பெற்றார். இதுவே அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ச்சியாகப் பல திரைப்படங்களில் பாடிய ஜொனிதா, ஏ.ஆர்.ரகுமானுடன் ஓர் இந்தித் திரைப்படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை அடுத்து, தமிழ்த் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார். மணி ரத்னம்' இயக்கிய ஓகே கண்மணி அவரது முதலாவது தமிழ்ப்பாடல் இடம்பெற்றது.
பின்னர் அனிரூத்தின் ஃபேவரட் பாடகிகளில் ஒருவராக மாறிய ஜோனிதா அவரது ஆல்பம் பாடல்கள் மற்றும் டாக்டர் படத்திலும் செல்லமா செல்லமா பாடல்களை