- Home
- Cinema
- வைரமுத்துவ உத்தமன்னு யாரும் சொல்ல மாட்டாங்க! ஒரு அரசியல் கட்சியோட பலம் அவருக்கு இருக்கு.. பாடகி சின்மயி பகீர்
வைரமுத்துவ உத்தமன்னு யாரும் சொல்ல மாட்டாங்க! ஒரு அரசியல் கட்சியோட பலம் அவருக்கு இருக்கு.. பாடகி சின்மயி பகீர்
கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாடகி சின்மயி அளித்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Chinmayi vs Vairamuthu
தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் ஒன்றை தெரிவித்தார். அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அந்த சமயத்தில் இது மிகப் பெரிய அளவில் பேசு பொருள் ஆனது. இந்தப் புகார் தெரிவிக்கும் முன்பு வரை சினிமாவில் முன்னணி பாடகியாக கோலோச்சி வந்த சின்மயிக்கு, மீ டூ புகாருக்குப் பின் யாருமே பட வாய்ப்பு தரவில்லை. அதுமட்டுமின்றி அவரை டப்பிங் யூனியனில் தமிழ் படங்களுக்கு டப்பிங் பேச தடை விதித்தனர். இதனால் சுமார் ஐந்து ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார் சின்மயி.
சினிமாவில் கம்பேக் கொடுத்த சின்மயி
இந்த தடையையும் மீறி லோகேஷ் கனகராஜ் போன்ற சில இயக்குனர்கள் சின்மயிக்கு வாய்ப்பு தந்தனர். அந்த வகையில் அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் சின்மயிக்கு முத்த மழை என்கிற பாடலை ஆடியோ லாஞ்சில் பாட வாய்ப்பு கிடைத்தது. அவர் பாடிய அந்த வீடியோ மிகவும் வைரலானதை தொடர்ந்து சின்மயிக்கு வாய்ப்பு தர வேண்டும் என நெட்டிசன்களும் வலியுறுத்த தொடங்கினர். இதனால் மீண்டும் அவருக்கு சினிமாவில் பழையபடி வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கின்றன. சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடத்தி முடித்தார் சின்மயி. இந்த நிலையில் அவர் வைரமுத்து பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
வைரமுத்து மீது சின்மயி புகார்
அதில் அவர் பேசியதாவது : திரையுலகில் யாரைக் கேட்டாலும் இவர் உத்தமர் என யாருமே சொல்ல மாட்டார்கள். ரகுமான் சார் அவர்களின் ஸ்டுடியோவுக்கு சென்றால் பத்திரமாக பாடிவிட்டு திரும்பி வருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும். இரண்டு மணி நேரம் தனியாக இவருடன் விட்டால் தன்னுடைய மகள் பத்திரமாக இருப்பாள் என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என இவருக்கு சப்போர்ட் பண்ணும் அரசியல்வாதிகளுக்கு ஓப்பனாக சவால் விட்டுள்ளார் சின்மயி. பொண்ணு மேல என்னால கை வைக்க முடியும் என்கிற தைரியம் அந்த ஆளுக்கு இருக்கிறது. அவருக்கு அரசியல் பலம் இருந்தது, இன்னும் இருக்கிறது. அந்த ஆளுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சப்போர்ட் பண்ணுகிறார்கள் என கூறி இருக்கிறார் சின்மயி.
வைரமுத்து அத்துமீறினார்
தொடர்ந்து பேசிய அவர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பற்றி பேசினார். அவர் என்னை கட்டி அணைக்கும் போது ஏதோ தப்பா இருக்கிறதே எனத் தோன்றியது. அதன்பின் என் கை கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. அதன் பின் அங்கிருந்து பதறி அடித்துக் கொண்டு கீழே ஓடி வந்தேன். இத்தனைக்கும் எங்க அம்மா கீழே இருந்தார். அது தெரிந்தும் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். பின்னர் காரில் ஏறியதும் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதை சொன்னேன் என சின்மயி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.