மார்பிங் போட்டோ வெளியிட்டு மிரட்டியவர்களுக்கு சின்மயி கொடுத்த செருப்படி ரிப்ளை..!
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பாடகி சின்மயி, தன்னுடைய மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டவர்களை லெஃப்ட் ரைட் வாங்கி இருக்கிறார். அதைப்பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

Chinmayi Reply for Morphing Image Issue
இனிமையான குரலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் சின்மயி. இவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி உள்ளன. சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பாடாமல் இருந்த சின்மயிக்கு இந்த ஆண்டு ஒரு விடிவுகாலம் பிறந்தது. தக் லைஃப் பட பாடல் வைரலான பின்னர் சின்மயிக்கு அடுத்தடுத்து பாட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சினிமா மட்டுமின்றி சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருப்பவர் தான் சின்மயி. அதில் பெண்களுக்கு எதிராக எந்த அநீதி நடந்தாலும் அதற்காக முதல் ஆளாக குரல் கொடுப்பவர் சின்மயி.
மார்பிங் புகைப்படத்தால் கடுப்பான சின்மயி
அப்படி தான், எக்ஸ் தள பக்கத்தில் சினிமா நடிகை ஒருவரின் மார்பிங் புகைப்படம் பதிவிடப்பட்டு இருந்ததை பார்த்து டென்ஷன் ஆன சின்மயி, அதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போலீசையும் டேக் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார். அந்த மார்பிங் புகைப்படத்தை வெளியிட்ட கும்பல் அடுத்ததாக செய்த செயல் சின்மயியை மேலும் ஆத்திரமடைய வைத்திருக்கிறது.
சின்மயி பதிலடி
சின்மயி போலீசில் புகார் அளித்ததும், அவரின் புகைப்படங்களையே மார்பிங் செய்தது மட்டுமின்றி படு மோசமாக கேப்ஷனும் போட்டு பதிவிட்டிருக்கிறார்கள். இதைப்பார்த்த சின்மயி அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டது மட்டுமின்றி, அந்த புகைப்படத்திற்கு மோசமாக கமெண்ட் செய்தவர்களின் புகைப்படங்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்திருந்தார். மேலும் அவர்களை விமர்சித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் சின்மயி.
வீடியோ வெளியிட்ட சின்மயி
அந்த வீடியோவில், பெண்கள் எப்பவும் ஆண்களுக்கு அடங்கியே போக வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் உள்ளது. அப்படி அடங்கிப் போகாதவர்கள் செத்துவிடலாம் என பதிவிட்டு உள்ளார்கள். எப்போதும் பெண்கள் அடங்கிப்போக வேண்டும் என்று தான் இந்த ஆணாதிக்கவாதிகள் எண்ணுகிறார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை தொடர்ந்து ஏதாவது சித்தரித்த வண்ணம் இருக்கிறார்கள். மார்பிங் புகைப்படங்களை உருவாக்கும் குரூர புத்தி கொண்ட ஆண்களுக்கு இதைதவிர வேறு எதுவும் தெரியாது” என சாடி இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

