- Home
- Cinema
- முதலிடத்தை இழந்த மூன்று முடிச்சு; இந்த வாரம் டிஆர்பி ரேஸில் டாப் 10 இடம்பிடித்த சீரியல்களின் லிஸ்ட் இதோ
முதலிடத்தை இழந்த மூன்று முடிச்சு; இந்த வாரம் டிஆர்பி ரேஸில் டாப் 10 இடம்பிடித்த சீரியல்களின் லிஸ்ட் இதோ
சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியல் கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல் பட்டியல் வெளியாகி உள்ளது.

serial TRP
சினிமாவை மிஞ்சும் திரைக்கதையுடன் ஒளிபரப்பாகி வருவதால் சின்னத்திரை சீரியல்களுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. சீரியல்களின் வெற்றியை தீர்மாணிப்பது அதன் டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 7வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது. இது எந்தெந்த சீரியல்கள் என்னென்ன இடத்தை பிடித்திருக்கின்றன. டிஆர்பியில் பின்னுக்கு தள்ளப்பட்ட சீரியல் எது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
Ramayanam Serial TRP
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புராண கதையம்சம் கொண்ட இராமாயணம் தொடர் தான் இந்த வாரம் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலுக்கு 6.11 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 8 மற்றும் 9வது இடத்தை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளன. இதில் 9ம் இடத்தில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.41 புள்ளிகளையும், 8வது இடத்தில் உள்ளா பாக்கியலட்சுமி சீரியல் 6.72 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... மை டியர் பூதம் முதல் ஜீ பூம்பா வரை; 90ஸ் கிட்ஸின் மனம்கவர்ந்த டாப் 5 ஃபேண்டஸி சீரியல் ஒரு பார்வை
Siragadikka Aasai Serial TRP
கடந்த வாரம் 7வது இடம் பிடித்திருந்த எதிர்நீச்சல் 2 சீரியல் இந்த வாரமும் 7.26 டிஆர்பி புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறது. இதையடுத்து 6ம் இடத்தில் அன்னம் சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 7.38 புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 5ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 8.21 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கின்றன.
Moondru Mudichu Serial TRP
எஞ்சியுள்ள டாப் 4 இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி மருமகள் சீரியல் கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 4ம் இடத்தை பிடித்துள்ளது. அந்த தொடருக்கு 8.29 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. கயல் சீரியல் 9.39 புள்ளிகளுடன் அதே 3ம் இடத்தில் நீடிக்கிறது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த மூன்று முடிச்சு சீரியலை இந்த வாரம் இரண்டாவது இடத்துக்கு தள்ளி, சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இதில் மூன்று முடிச்சு சீரியலுக்கு 9.57 டிஆர்பியும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.62 டிஆர்பியும் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... சன் குடும்பம் விருதுகள் 2025 : சிறந்த சீரியல் எது? பெஸ்ட் ஜோடி யார்? வின்னர் லிஸ்ட் இதோ