- Home
- Cinema
- மை டியர் பூதம் முதல் ஜீ பூம்பா வரை; 90ஸ் கிட்ஸின் மனம்கவர்ந்த டாப் 5 ஃபேண்டஸி சீரியல் ஒரு பார்வை
மை டியர் பூதம் முதல் ஜீ பூம்பா வரை; 90ஸ் கிட்ஸின் மனம்கவர்ந்த டாப் 5 ஃபேண்டஸி சீரியல் ஒரு பார்வை
90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல்கள் பல இருந்தாலும் அதில் மை டியர் பூதம், ஜீ பூம்பா உள்ளிட்ட ஃபேண்டஸி சீரியல்களுக்கு தனி இடம் உண்டு. அப்படி 90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த ஃபேண்டஸி சீரியல்கள் பற்றி பார்க்கலாம்.

Tamil Fantasy serials
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போன் தான் அவர்களின் உலகமாகவே மாறிவிட்டது. அதில் ரைம்ஸ் வீடியோ பார்ப்பதும், கார்ட்டூன் ரீல்ஸ் பார்ப்பதும் தான் அவர்களுக்கு பொழுதுபோக்காக உள்ளது. இன்று குழந்தைகளை கவர பல சேனல்கள் இருக்கின்றன. ஆனால் 90ஸ் காலகட்டத்தில் குழந்தைகளுக்காகவே சில சீரியல்கள் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டன. அந்த சீரியல்கள் ஒளிப்பரப்பாகும் நேரத்திற்கு எங்கே இருந்தாலும் குழந்தைகள் வீட்டில் ஆஜராகிவிடுவார்கள். அப்படி 90ஸ் கிட்ஸை கட்டிப்போட்ட டாப் 5 ஃபேண்டஸி சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஷக்திமான்
ஃபேண்டஸி சீரியல்களுக்கு தமிழ்நாட்டில் பிள்ளையார் சுழி போட்டது ஷக்திமான் தான். 90ஸ் கிட்ஸுக்கு தெரிந்த முதல் சூப்பர் ஹீரோவும் ஷக்திமான் தான். அந்த சீரியலில் ஷக்திமான் செய்யும் சாகசங்களை விரும்பி பார்த்ததோடு மட்டுமின்றி அவரைப்போலவே டிரஸ் மாட்டிக்கொண்டு குழந்தைகள் உலாவந்த சம்பவம் அரங்கேறின. அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் பேமஸ் ஆன தொடராக இருந்தது ஷக்திமான்.
ஜீ பூம் பா
தமிழ்நாட்டில் அதிகம் கொண்டாடப்பட்ட ஃபேண்டஸி சீரியல்களில் ஜீ பூம் பா சீரியலும் ஒன்று. அதில் கலர் கலர் பென்சிலில் வரையப்படும் பொருட்கள் தத்ரூபமாக கிடைக்கும். இந்த சீரியல் பேமஸ் ஆன சமயத்தில் ஜீ பூம் பா பென்சில் என கடைகளில் அதே மாடல் பென்சில்கள் அதிகளவில் விற்பனை ஆனது. அதை வாங்காத 90ஸ் கிட்ஸே இருக்க மாட்டார்கள்.
இதையும் படியுங்கள்... சன் குடும்பம் விருதுகள் 2025 : சிறந்த சீரியல் எது? பெஸ்ட் ஜோடி யார்? வின்னர் லிஸ்ட் இதோ
மை டியர் பூதம்
90ஸ் கிட்ஸில் மனம் கவர்ந்த சீரியல்களில் மை டியர் பூதம் தொடரும் ஒன்று. இந்த சீரியலில் இடம்பெற்ற மூசா கதாபாத்திரத்திற்கு அதிகளவில் ரசிகர்கள் இருந்தனர். அண்மையில் வெளிவந்த குடும்பஸ்தன் படத்தில் அந்த மூசா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடித்திருந்தார். அன்று கொழு கொழுவென இருந்த மூசா இன்று கல்யாணம் ஆகி அவருக்கு குழந்தையே இருக்கிறது.
மாயா மச்சீந்திரா
ஷக்திமான் சீரியலின் தமிழ் வெர்ஷன் போல இருப்பது தான் இந்த மாயா மச்சீந்திரா சீரியல். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியலில் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் நடித்திருந்தார். சாதுவான ஹீரோ, பிரச்சனைகள் வரும்போது சூப்பர் ஹீரோவாக மாறி எதிரிகளை அடித்து துவம்சம் செய்வார். இந்த சீரியலும் சில ஆண்டுகள் வெற்றிநடை போட்டது.
ஜென்மம் எக்ஸ்
விஜய் டிவி கொடுத்த மற்றுமொரு சூப்பர் ஹிட் சீரியல் தான் ஜென்மம் எக்ஸ். இந்த சீரியல் வார வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த சீரியலின் திகிலூட்டும் காட்சிகளும் பதைபதைக்க வைக்கும் பின்னணி இசையும் செம திரில்லிங் அனுபவத்தை கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள்... Top 5 Serial Villi Actress: சன் டிவி சீரியலில் கொடூர வில்லியாக மிரட்டும் 5 நடிகைகள்!