MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதியின் தலையெழுத்து... இத்தனை பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினாரா விஜய்?

தளபதியின் தலையெழுத்து... இத்தனை பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினாரா விஜய்?

சிங்கம் முதல் சண்டக்கோழி வரை நடிகர் விஜய் கதைகேட்டு நடிக்க மறுத்து வேறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு ஹிட்டான படங்கள் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 30 2024, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy Vijay Missed Movies

Thalapathy Vijay Missed Movies

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கோலிவுட்டில் ஏராளமான கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதிகளவிலான வெற்றிப்படங்களில் நடித்த விஜய் இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்துக்கு ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இப்படி ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் தவறவிட்ட படங்களும் ஏராளம். அதன் பட்டியலை பார்க்கலாம்.

24
Mudhalvan

Mudhalvan

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து பிரம்மாண்ட வெற்றியடைந்த முதல்வன் படத்தின் கதை விஜய்க்கு தான் சொல்லி இருக்கிறார் ஷங்கர். ஆனால் அந்த சமயத்தில் அரசியல் படங்கள் வேண்டாம் என தவிர்த்த விஜய், அதில் நடிக்க மறுத்துவிட்டார். இதுதவிர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா மற்றும் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ரன் போன்ற படங்களில் பர்ஸ்ட் சாய்ஸாக இருந்தது தளபதி விஜய் தானாம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய் உள்ளது.

இதையும் படியுங்கள்... ஹோட்டலில் ஹீரோயினுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை! நடுவில் புகுந்து அடி வாங்கிய ஷகீலா - ஷாக் தகவல்!

34
Sandakozhi

Sandakozhi

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சண்டக்கோழி திரைப்படமும் விஜய் நடிக்க வேண்டியது தானாம். அப்படத்தின் முதல் பாதி கதையை மட்டும் கேட்ட விஜய் படத்தில் தன்னைவிட ராஜ்கிரணுக்கு அதிக ஸ்கோப் இருப்பதால் நடிக்க மறுத்துவிட்டாராம். அதேபோல் விக்ரமன் இயக்கிய உன்னை நினைத்து படத்தில் முதலில் நடித்தது விஜய் தான், பின்னர் சில நாட்களில் அவர் விலகியதால் அவரது இடத்தை சூர்யா ரீப்ளேஸ் செய்தார்.

44
Ponniyin Selvan

Ponniyin Selvan

இதுதவிர சேரன் இயக்கிய ஆட்டோகிராப், தரணியின் தூள், சுந்தர் சி-யின் உள்ளத்தை அள்ளித்தா, ஹரி இயக்கிய சிங்கம், கே.வி.ஆனந்தின் அநேகன் ஆகிய படங்களில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான். அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் திரைப்படமான பொன்னியின் செல்வனிலும் விஜய் நடிப்பதாக இருந்தது. அவர் 2010ம் ஆண்டு அப்படத்தை இயக்க முயலும் போது அதில் விஜய்யையும் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் அப்படம் அந்த சமயத்தில் எடுக்க முடியாததால் கைவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்... நாக சைதன்யாவின் தாய் லட்சுமி மீண்டும் திருமணம் செய்து கொண்டாரா? 2வது கணவர் யார்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏ.ஆர்.ரகுமானை காதலித்த நடிகை... திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட அந்த நாயகி யார்?
Recommended image2
Pandian Stores 2 Today Episode : அஞ்சலி பற்றி கேட்ட மீனா... ஆடிப்போன சரவணன் - இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸுக்கு நாள் குறித்த நிலா... அதிர்ச்சியில் சோழன் - அனல்பறக்கும் இன்றைய எபிசோடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved