MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரீ-ரிலீஸ் ஆன சிம்புவின் மாநாடு; அதுவும் இத்தனை தியேட்டர்களிலா?

ரீ-ரிலீஸ் ஆன சிம்புவின் மாநாடு; அதுவும் இத்தனை தியேட்டர்களிலா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 31 2025, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாநாடு ரீ ரிலீஸ்

மாநாடு ரீ-ரிலீஸ்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சிம்புவுக்கு பெரியளவில் வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த போடா போடி, வாலு, அன்பானவன் அடங்காதவன், அசராதவன், வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த சிம்புவுக்கு உடல் எடையும் அதிகரித்தது. இதனால் சிம்புவின் கெரியர் அவ்வளவுதான் என்கிற பேச்சும் எழுந்தது.

24
சிம்புவின் மாநாடு

சிம்புவின் மாநாடு

அந்த சமயத்தில் தான் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டது. இந்த ஊரடங்கு காலகட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிம்பு, அதில் தீவிரமாக உடற்பயிற்சி பெற்றதோடு, ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்து மளமளவென உடல் எடையை குறைத்தார். சுமார் 30 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து 20 வயசு பையனாக மாறிய சிம்பு, பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். அவர் உடல் எடையை குறைத்த பின் நடித்த முதல் படம் மாநாடு.

இதையும் படியுங்கள்... நல்ல வேள அவர் நடிக்கல; VTV-ல் சிம்புவுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோவா?

34
சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல்

சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல்

வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். மாநாடு திரைப்படம் டைம் லூப் கான்செப்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. மிகவும் சிக்கலான திரைக்கதை நேர்த்தியாக மக்களுக்கு புரியும் வகையில் படமாக்கி அதில் வெற்றியும் கண்டார் வெங்கட் பிரபு. நடிகர் சிம்புவின் கெரியரில் 100 கோடி வசூல் அள்ளிய முதல் படம் மாநாடு தான்.

44
தமிழகத்தில் ரீ ரிலீஸ் ஆன மாநாடு

தமிழகத்தில் ரீ ரிலீஸ் ஆன மாநாடு

மாநாடு படம் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அப்படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். நடிகர் சிம்பு வருகிற பிப்ரவரி 3ந் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ளார். அதையொட்டி மாநாடு திரைப்படத்தை தமிழகமெங்கும் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். சுமார் 70 திரையரங்குகளில் மாநாடு திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படத்தை திரையரங்குகளில் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  நடிகர் சிம்பு நடித்து டிராப் ஆன படங்கள் ஒரு பார்வை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆரோக்கியமான போட்டி.. ஆச்சரியமான ஹிட்! எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலில் உருவான காவியங்கள்.. திரையுலகின் பொற்கால ரகசியங்கள்!
Recommended image2
இயக்குநர், நடிகர்.. இப்போ தயாரிப்பாளர்! பிரதீப் ரங்கநாதனின் 'வேற லெவல்' அவதாரம்! படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?
Recommended image3
சம்பளம் தான் காரணமா? மணிரத்னம் பட வாய்ப்பை தட்டி கழித்த தனுஷ் - கோலிவுட்டில் வெடித்த சர்ச்சை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved