MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்லி... ஐஸ்வர்யா ராய்-க்கு ‘ஐஸ்’ வைத்த சிம்பு

பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்லி... ஐஸ்வர்யா ராய்-க்கு ‘ஐஸ்’ வைத்த சிம்பு

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் சிம்புவின் பேச்சு ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்திருந்தது. 

2 Min read
Author : Ganesh A
Published : Mar 30 2023, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள், கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிம்புவின் பேச்சு ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்திருந்தது. அவர் என்ன பேசினார் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

அதில் அவர் பேசியதாவது : “கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் என என்னுடைய குரு எல்லோருமே இங்க இருக்காங்க. அவர்கள் முன் பேச சற்று பதட்டமா இருக்கு. பொன்னியின் செல்வன் முதல் பாகம் எவ்வளவு பெரிய ஹிட் ஆச்சுனு எல்லோருக்கும் தெரியும். இப்ப இரண்டாம் பாகம் வேற ரிலீஸ் ஆகப் போகுது.  நான் கஷ்டமான சூழல்ல இருந்தப்போ, எனக்கு செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்தவர் மணிரத்னம் சார். 

34

அவரை நான் சின்ன குழந்தையாகத் தான் பார்க்கிறேன். ஏனெனில், குழந்தைங்க மட்டும் தான் தனக்கு என்ன வேணுமோ அதை அடம்பிடித்து வாங்கிவிடுவார்கள். அந்த மாதிரி தான் மணி சாரும், தனக்கு என்ன வேணும் நினைக்கிறரோ அது வர்ற வரும் வரைக்கும் விட மாட்டார். இன்னைக்கு நான் சரியான டைமுக்கு ஷூட்டிங் போறேன்னா அதுக்கு மணிரத்னம் சார் தான் காரணம். 

ரசிகர்களாகிய உங்களைப் போல் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துல  விக்ரம் - ஐஸ்வர்யா, கார்த்தி - த்ரிஷா ஆகியோரின் போர்ஷனைப் பார்க்க நானும் ஆர்வமா இருக்கேன். முடிஞ்சா இன்னும் 2 பார்ட் கூட எடுங்க சார். நாங்க பாத்துகிட்டே இருப்போம். 

இதையும் படியுங்கள்... என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை கேட்ட மணிரத்னம்! ரொம்ப கஷ்டமா போச்சு... சரத்குமார் ஆதங்கம்!

44

சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும் போது என்னை ஓவியம் வரைய சொன்னாங்க. என்ன வரையலாம்னு எனக்கு தெரியல. உடனே நான் ஐஸ்வர்யா ராயை தான் வரைந்தேன். அதுக்காக எனக்கு பர்ஸ்ட் பிரைஸும் கொடுத்தாங்க. நான் வரைஞ்சதுனால எனக்கு முதல் பரிசு கிடைக்கல. அதுல நீங்க இருந்ததுனால தான் கிடைச்சுது என சிம்பு சொன்னதும், அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

இதையடுத்து சிம்புவிடம், இந்த படத்துல உங்களுக்கு ரொம்ப புடிச்சது குந்தவையா? நந்தினியா? என தொகுப்பாளர் கேட்க, அதற்கு சிம்பு “இரண்டு கண்ணுல எது வேணும்னு கேட்டா என்ன பண்ண முடியும்?” என பதிலளித்ததும் விசில் பறந்தது. இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பேசிய சிம்பு, தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறார். எப்படி அவரால் மட்டும் முடிகிறது என தெரியவில்லை. நேற்று முன்தினம் தான் பத்து தல பார்த்தேன். பிரிச்சி மேஞ்சிட்டாருங்க. அந்தப்படம் அவ்ளோ சூப்பரா வந்துருக்கு என சிம்பு தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் விழாவில் அருகருகே சேர் போட்டும் ஜோடியாக அமர மறுத்த சிம்பு - திரிஷா... லீக்கான போட்டோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ராய்
சிலம்பரசன்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved