பொன்னியின் செல்வன் விழாவில் அருகருகே சேர் போட்டும் ஜோடியாக அமர மறுத்த சிம்பு - திரிஷா... லீக்கான போட்டோ
நேரு ஸ்டேடியத்தில் நடந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்புவும் திரிஷாவும் ஜோடியாக அமர மறுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசனும், சிம்புவும் கலந்துகொண்டனர். கமல்ஹாசன் பங்கேற்பது முன்னரே அறிவிக்கப்பட்டாலும், நடிகர் சிம்பு சர்ப்ரைஸாக வந்து கலந்துகொண்டார்.
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்களுக்கு முன் வரிசை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் யார் யாருக்கு எந்த இருக்கை என்பதை குறிக்கும் விதமாக அவரவர் பெயர்களுடன் கூடிய இருக்கைகள் வரிசையாக போடப்பட்டு இருந்தன. அந்த வகையில் நடிகர் சிம்புவுக்கும், திரிஷாவுக்கும் முதலில் அருகருகே இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. இதன் புகைப்படங்களும் வெளியானதால், விடிவி கார்த்தி - ஜெஸ்ஸி மீண்டும் இணைந்துவிட்டார்கள என மீம்ஸ் போட்டு வந்தனர்.
இதையும் படியுங்கள்... நல்ல வேளை நான் பொன்னியின் செல்வன் எடுக்கல... எடுத்திருந்தா சொதப்பிருப்பேன் - பாரதிராஜா ஓபன் டாக்
ஆனால் விழாவில் சிம்பு அருகே திரிஷா அமரவே இல்லை. பின்னர் தான் விழா தொடங்கும் முன்னே சிம்பு அருகே போடப்பட்டு இருந்த திரிஷாவின் இருக்கையை மாற்றிவிட்டு கார்த்தியின் இருக்கையை சிம்பு அருகே போட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படமும் வெளியாகி உள்ளதால், இரண்டையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர்.
முதலில் சிம்புவும், திரிஷாவும் ஜோடியாக அமர இருந்த நிலையில், கடைசியில் அதனை மாற்றியது யார் என கேள்வி எழுந்துள்ளது. திரிஷா சிம்புவுடன் அமர்ந்தால் காதல் கிசுகிசு எதுவும் மீண்டும் கிளம்பி விடுமோ என்கிற பயத்தில் அமர மறுத்திருக்கலாம் என்றும், நமக்கு எதுக்கு வம்புனு சிம்புவே திரிஷா உடன் அமர மறுத்திருக்கலாம் எனவும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை சிம்புவோ, அல்லது திரிஷாவோ சொன்னால் தான் தெரியவரும்.
இதையும் படியுங்கள்... என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை கேட்ட மணிரத்னம்! ரொம்ப கஷ்டமா போச்சு... சரத்குமார் ஆதங்கம்!