- Home
- Cinema
- தயவுசெஞ்சி கல்யாணம் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணாதீங்க - பெற்றோரிடம் ஸ்டிரிக்ட் ஆக சொன்ன சிம்பு
தயவுசெஞ்சி கல்யாணம் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணாதீங்க - பெற்றோரிடம் ஸ்டிரிக்ட் ஆக சொன்ன சிம்பு
Simbu : வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, கல்யாணம் பண்ணிக்க சொல்லி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டார்ச்சர் பண்ண வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் சித்தி இதானி. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு படத்தில் 19 வயது இளைஞனாக சிம்பு நடித்துள்ளதால் இப்படத்திற்காக அவர் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறாராம். மும்பையில் தான் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. இது ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம், சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார். இந்த நிகழ்வில் பேசிய சிம்பு, பெற்றோருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.
இதையும் படியுங்கள்... இந்தி படங்களை ஓரங்கட்டி... மீண்டும் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் தென்னிந்திய திரைப்படம்
அதன்படி, கல்யாணம் பண்ணிக்க சொல்லி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டார்ச்சர் பண்ண வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், இவ்வாறு கொடுக்கப்படும் அழுத்தங்களால் தான் தவறான திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடப்பதாக கூறினார். அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்னு பிள்ளைகளை விட்டுவிடுங்கள், மேலே இருக்குறவன் அவர்களுக்கான ஒருத்தரை நிச்சயம் அனுப்புவார் என சிம்பு பேசியுள்ளார்.
அவரின் இந்த பேச்சை பார்க்கும்போது, அவரது பெற்றோரும் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சிம்புவுக்கு டார்ச்சர் கொடுத்து வருவதை மறைமுகமாக தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட சிம்புவின் பெற்றோரும், அவரது சகோதரியும், சிம்புவுக்கு மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணை தேடி வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வீட்ல சும்மா தான் இருக்கேன்... மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் - கேப்டன் பட விழாவில் ஓப்பனாக பேசிய சந்தானம்