MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உருகி உருகி காதலித்த பின் பிரேக் அப் செய்து பிரிந்த கோலிவுட்டின் லவ் பெயிலியர் ஜோடிகள் ஒரு பார்வை

உருகி உருகி காதலித்த பின் பிரேக் அப் செய்து பிரிந்த கோலிவுட்டின் லவ் பெயிலியர் ஜோடிகள் ஒரு பார்வை

சினிமாவில் நடிகர், நடிகைகள் இடையே காதல் ஏற்படுவது வழக்கம், ஆனால் அது திருமணத்தில் முடிவதை விட பிரேக் அப்பில் முடிவதே அதிகமாக உள்ளது.

3 Min read
Ganesh A
Published : Nov 10 2024, 12:23 PM IST| Updated : Nov 10 2024, 07:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Love Failure Couples in Kollywood

Love Failure Couples in Kollywood

சினிமா தான் பல காதல் ஜோடிகளை இணைத்து வைக்கிறது. சினிமா பார்த்து காதலித்தவர் நாட்டில் ஏராளம். அப்படி இருக்கையில், சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இடையே காதல் ஏற்படுவதும் கோலிவுட்டுக்கு புதிதல்ல. தமிழ் சினிமாவில் சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி, சினேகா - பிரசன்னா என ஏராளமான சக்சஸ்புல் காதல் ஜோடிகள் இருந்தாலும், கைகூடாத காதல் ஜோடிகளும் இங்கு உள்ளனர். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

210
Kamal, srividya

Kamal, srividya

கமல்ஹாசன் - ஸ்ரீவித்யா

உலகநாயகன் கமல்ஹாசன் கோலிவுட்டின் காதல் மன்னனாக வலம் வந்தவர். இவர் நடிகைகள் வாணி கணபதி, சரிகா ஆகியோரை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் இவரின் முதல் காதல் கைகூடாமல் போனது. அவர் நடிகை ஸ்ரீவித்யாவை உருகி உருகி காதலித்து வந்தார். அந்த காதல் கைகூடாவிட்டாலும் கடைசி வரை தன்னுடைய காதலை இருவரும் கைவிடவில்லை. ஸ்ரீவித்யா கேன்சரால் மரணப்படுக்கையில் இருந்தபோதும் அவரின் கடைசி ஆசையை கமல் நிறைவேற்றினார்.

310
Simbu, Nayanthara

Simbu, Nayanthara

நயன்தாரா - சிம்பு

சிம்புவும், நயன்தாரா முதன்முறையாக வல்லவன் படத்தில் நடித்தபோதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போது இருவரும் ஜோடியாக பட விழாக்களில் கலந்துகொண்டு வந்தனர். சிம்பு இவரை தான் திருமணம் செய்துகொள்வார் என கூறப்பட்டு வந்த நிலையில், இருவரின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகி அதுவே அவர்கள் பிரேக் அப் செய்து பிரியவும் வித்திட்டது.

410
Prabhu Deva, Nayanthara

Prabhu Deva, Nayanthara

நயன்தாரா - பிரபுதேவா

சிம்புவுக்கு அடுத்தபடியாக நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்ட நயன்தாரா. அவருக்காக சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தார். அதுமட்டுமின்றி மதமும் மாறினார். இவர்களின் காதல் திருமணம் வரை சென்று நின்றுபோனது. பிரபுதேவாவை பிரேக் அப் செய்த பின் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நயன்தாரா.

510
Hansiika, Simbu

Hansiika, Simbu

சிம்பு - ஹன்சிகா

நயன்தாரா உடனான காதல் முறிவுக்கு பின்னர் நடிகை ஹன்சிகா மீது காதல் வயப்பட்டார் சிம்பு. இவர்கள் இருவரும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தபோது டேட்டிங் செய்து வந்தனர். ஆனால் ஒரே ஆண்டில் இவர்கள் காதல் முடிவுக்கு வந்தது. இந்த காதல் முறிவை தொடர்ந்து ஹன்சிகா, சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... வேட்டையனுக்கு வேட்டு வைத்த அமரன்! ரஜினி பட லைஃப் டைம் வசூலை 10 நாளில் அள்ளிய SK

610
anirudh

anirudh

அனிருத் - ஆண்ட்ரியா

இசையமைப்பாளர் அனிருத் 19 வயதிலேயே பாடகி ஆண்ட்ரியா மீது காதல் வயப்பட்டார். இவர்கள் இருவரும் படுக்கையறையில் நெருக்கமாக முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆன பின்னர் பிரேக் அப் செய்து பிரிந்தனர். ஆனால் தங்கள் காதல் முறிவுக்கு தன்னைவிட ஆண்ட்ரியா வயதில் மூத்தவராக இருப்பதே காரணம் என கூறினார் அனிருத்.

710
Siddharth, Samantha

Siddharth, Samantha

சித்தார்த் - சமந்தா

நடிகை சமந்தாவும் நடிகர் சித்தார்த்தும் உருகி உருகி காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் திருமணத்திற்காக கோவில்களில் பரிகாரம் செய்த சம்பவமும் அரங்கேறின. ஆனால் அதன்பின்னர் திடீரென ஏற்பட்ட மனக்கசப்பால் இவர்கள் காதல் கைகூடாமல் போனது. 

810
Jai Anjali

Jai Anjali

ஜெய் - அஞ்சலி

எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடியாக நடித்தபோது நடிகர் ஜெய் - நடிகை அஞ்சலி இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் உருகி உருகி காதலித்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரேக் செய்து பிரிந்துவிட்டனர்.

910
vishal, Varalaxmi

vishal, Varalaxmi

விஷால் - வரலட்சுமி

நடிகர் விஷாலும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் உருகி உருகி காதலித்து வந்தனர். சரத்குமார் உடன் விஷாலுக்கு ஏற்பட்ட மனக்கசப்பால், தன் தந்தைக்காக காதலை முறித்துக் கொண்டார் வரலட்சுமி. இதையடுத்து அண்மையில் நிகோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் வரலட்சுமி.

1010
Kavin, Losliya

Kavin, Losliya

கவின் - லாஸ்லியா

கோலிவுட்டில் தற்போது இளம் நடிகராக வலம் வருபவர் கவின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அங்கு சக போட்டியாளராக வந்திருந்த நடிகை லாஸ்லியா மீது காதல் வயப்பட்டார். ஆனால் பிக்பாஸ் முடிந்த கையோடு அவர்களின் காதலும் முடிவுக்கு வந்தது.

இதையும் படியுங்கள்... 6 மாதத்தில் தனுஷுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுவோம் - நெப்போலியன் ஓபன் டாக்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved