- Home
- Cinema
- விரைவில் அப்பாவாகப் போகும் பிரபல நடிகர்... திருமண நாளில் கர்ப்பிணி மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ்...!
விரைவில் அப்பாவாகப் போகும் பிரபல நடிகர்... திருமண நாளில் கர்ப்பிணி மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ்...!
இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் மகத் - பிராச்சி தம்பதியை பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.

“மங்காத்தா”, “ஜில்லா”, “வந்தா ராஜாவா தான் வருவேன்” ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மகத். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய நீண்ட நாள் காதலியும், மாடல் அழகியுமான பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நடந்த திருமணத்தில் மகத்தின் நெருங்கிய நண்பரான சிம்பு, பட்டு வேட்டி சட்டை சும்மா ஜம்முன்னு கலந்து கொண்ட போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

புதுமுக இயக்குநர் பிரபுராம் இயக்கத்தில் மகத், பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்த ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதேபோல் பிக்பாஸ் யாஷிகாவுடன் ‘இவன் தான் உத்தமன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இன்று தங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இந்த காதல் தம்பதி மகிழ்ச்சியான செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

கர்ப்பிணியான பிராச்சியின் வயிற்றை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ள மகத், “நாங்கள் இருவரும் மற்றொரு சிறிய குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இப்படிப்பட்ட சிறப்பான பரிசை கொடுத்ததற்கு நன்றி பிராச்சி மிஸ்ரா... லவ் யூ” என பதிவிட்டுள்ளார்.

கர்ப்பிணியான பிராச்சியின் வயிற்றை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ள மகத், “நாங்கள் இருவரும் மற்றொரு சிறிய குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இப்படிப்பட்ட சிறப்பான பரிசை கொடுத்ததற்கு நன்றி பிராச்சி மிஸ்ரா... லவ் யூ” என பதிவிட்டுள்ளார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் மகத் - பிராச்சி தம்பதியை பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.

இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் மகத் - பிராச்சி தம்பதியை பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.