- Home
- Cinema
- சின்ன வயசுல ரொம்பவே கஷ்டப்படுத்தினாங்க – Thug Life Audio Launchல் உணர்ச்சிப்பூர்வமாக பேசிய சிம்பு!
சின்ன வயசுல ரொம்பவே கஷ்டப்படுத்தினாங்க – Thug Life Audio Launchல் உணர்ச்சிப்பூர்வமாக பேசிய சிம்பு!
Simbu Speech at Thug Life Audio Launch in Tamil : தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். சிம்புவும் தன் பங்கிற்கு உணர்ச்சிப்பூர்வமாக பேசி அசத்தினார்.

தக் லைஃப் இசை வெளியீடு
Simbu Speech at Thug Life Audio Launch in Tamil : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் தக் லைஃப். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று சென்னை சாய் ராம் கல்லூரியில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
தக் லைஃப் இசை வெளியீட்டு விழா
அப்போது பேசிய சிம்பு கூறியிருப்பதாவது: இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல் தான். இந்தப் படத்தில் அபிராமியின் நடிப்பு பெரியளவில் பேசப்படும். அசோக் செல்வன் இன்னும் அடுத்தடுத்த லெவலுக்கு வரணும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு நானும் த்ரிஷாவும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம்.
மணிரதனம் தான் காரணம் - பொன்னியின் செல்வன் ஏன் நடிக்கவில்லை
பீப் சாங் என்னை ரொம்பவே பாதித்தது. அதிலிருந்து எனக்காக உருவாக்கப்பட்ட பாடல் தான் தள்ளிப் போகாதே. அப்பாவிற்கு பிறகு எனக்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தது ரஹ்மான். அஞ்சலி படம் பார்த்த பிறகு என்னை ஏன் நடிக்க கூப்பிடவில்லை என்று நான் அவரிடம் கேட்டேன். நான் நடித்த படங்கள் எல்லாமே மசாலா படங்கள் தான். அந்த நேரங்களில் எனக்கு ரெட் கார்டு கொடுக்கும் நிலை கூட வந்தது. அப்போது தான் எனக்கு மணி சார் ஆபிசிலிருந்து போன் வந்தது. அப்படி நான் நடித்த படம் தான் செக்க சிவந்த வானம். இதே போன்று ஒரு சில படங்களுக்கும் என்னை அழைத்தார்கள். பொன்னியின் செல்வன் படத்திற்கும் என்னை அழைத்தார்கள்.
கமலுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி - சிம்பு
ஒரு சில காரணங்களால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. முதல் முதலில் தக் லைஃப் படத்தில் நடிக்க என்னை கூப்பிட்ட போது என்னால் கெட்டப் காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு கமல் ஹாசன் சார் வந்த பிறகு அவருடன் நடிக்கும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலமாக அமைந்தது. கமல் சாரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன்
எனக்கு சின்ன வயசுல நடிப்பு சொல்லி கொடுத்தது என்னுடைய அம்மாவும், அப்பாவும் தான். அப்போதெல்லாம் நான் ரொம்பவே யோசிச்சிருக்கேன். நான் நம்மை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்துறாங்க என்று. ஏனென்றால் என்னுடைய வயசு பசங்க எல்லோருமே ரொம்பவே ஜாலியா இருப்பாங்க.
தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு
ஆனால் நான் மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங் போகணும், இன்னொரு பக்கம் படிக்கணும். நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல் சார் உடன் இணைந்து நடிக்கும் அந்த பாக்கியம் கிடைத்ததற்கு இப்போது பெருமையாக இருக்கிறது. சின்ன வயசுலேயே சிம்புவிற்கு பாட தெரியும், ஆட தெரியும் என்று எல்லோருமே சொல்லும் போது அது எல்லாவற்றிகும் காரணம் என்னுடைய அப்பாவும், அம்மாவும் தான். அவர்களுக்கு நன்றி என்று கண் கலங்கியவாறு பேசியுள்ளார்.