- Home
- Cinema
- சிம்பு பட்டு வேட்டி சட்டைல போறாரு.... விக்கி - நயன் குழந்தையோட வர்றாங்க!! - இது என்னப்பா புது டிரெண்டா இருக்கு
சிம்பு பட்டு வேட்டி சட்டைல போறாரு.... விக்கி - நயன் குழந்தையோட வர்றாங்க!! - இது என்னப்பா புது டிரெண்டா இருக்கு
வெந்து தணிந்தது காடு படத்தின் ஹூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு (Simbu) பட்டு வேட்டி சட்டை அணிந்தபடி கோவிலுக்குள் செல்வது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு, இயக்குனராக அறிமுகமான படம் வல்லவன். இப்படத்தில் நயன்தாரா சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் போது சிம்புவுக்கும் நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து சில ஆண்டுகள் நெருக்கமாக பழகி வந்த இருவரும் ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.
இதையடுத்து பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா, இந்த காதலும் ஓரிரு ஆண்டுகளில் தோல்வி அடைந்தது. இதையடுத்து சிம்புவின் போடா போடி படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா.
நானும் ரவுடி தான் படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த படத்தைப்போல் இவர்களது காதலும் 6 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது.
இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருவரும் லிவ்விங் டூகெதர் முறையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது இருவரும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
சமீப காலமாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் எதாவது வெளியானால் அதற்கு போட்டியாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட்டும் வெளியிடுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் ஹூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு பட்டு வேட்டி சட்டை அணிந்தபடி கோவிலுக்குள் செல்வது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், அதற்கு போட்டியாக துபாய் சென்றுள்ள விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இந்தியா திரும்பும்போது ஏர்போர்ட்டில் குழந்தையுடன் ஜோடியாக போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்வாறு சிம்பு, நயன்தாராவின் புகைப்படங்கள் மாறி மாறி வைரலாவதைப் பார்த்த ரசிகர்கள் இது என்னப்பா புது டிரெண்டா இருக்கு என கிண்டலடித்து வருகின்றனர்.