மீண்டும் ஒன்றும் சேரும் சிம்பு - நயன்தாரா?... உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!
இந்நிலையில் சிம்பு, நயன் மீண்டும் இணைய உள்ளதாகவும் வதந்தி கிளம்பியுள்ளது.
கோலிவுட்டில் பரபரப்பு கிளப்பிய காதல் ஜோடிகளில் சிம்பு- நயன்தாரா ஜோடியும் ஒன்று. “வல்லவன்” படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், மிக குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. சிம்புவுடனான அந்தரங்க புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் கசிய, கடுப்பான நயன்தாரா காதலை முறித்துக் கொண்டார்.
அதன் பின்னர் நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டு, கல்யாணம் வரை சென்றது. ஆனால் அந்த காதலும் கைகூடவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்தி.
தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் 5 ஆண்டுகளாக காதலில் இருக்கும் நயன்தாரா, விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிம்பு, நயன் மீண்டும் இணைய உள்ளதாகவும் வதந்தி கிளம்பியுள்ளது.
ஹலோ அதுக்காக வேற மாதிரி எல்லாம் கற்பனை பண்ணாதீங்க. இந்த விஷயமே வேற. உடல் எடையைக் குறைத்து செகண்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்துள்ள சிம்பு ஈஸ்வரன், மாநாடு, பத்து தல படங்களை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
“விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தை அடுத்து சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் “அச்சம் என்பது மடமையடா” படத்தில் நடித்தார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான அந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது சிம்பு, கெளதம் மேனன் இணைந்துள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார்.
மீண்டும் ஒரு காதல் கதையை ரசிகர்கள் திரையில் பார்க்க காத்திருக்கும் நிலையில், இந்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து ஐசரி கணேசன் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க நயன் கமிட்டாகியுள்ளதால், சிம்பு படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.