- Home
- Cinema
- Simbu social media record : ஒரே ஆண்டில் ரஜினி, தனுஷ், சூர்யாவை ஓரங்கட்டி.... சிம்பு படைத்த டாப் டக்கர் சாதனை
Simbu social media record : ஒரே ஆண்டில் ரஜினி, தனுஷ், சூர்யாவை ஓரங்கட்டி.... சிம்பு படைத்த டாப் டக்கர் சாதனை
பல ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் உள்ள சிம்பு, சூர்யா, ரஜினி ஆகியோரை ஒரே ஆண்டில் ஓரங்கட்டி சிம்பு படைத்துள்ள இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வரும் சிம்பு, தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
உடல் எடை கூடியதால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காமல் திண்டாடி வந்த சிம்புவுக்கு, கடந்தாண்டு வெளியான மாநாடு திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவர் உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல், தற்போது தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த சிம்புவுக்கு, அதில் தொடர்ந்து ஏராளமான பாலோவர்கள் கிடைத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார் சிம்பு. அவரை இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பாலோ செய்கின்றனர். இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை கொண்ட கோலிவுட் நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சிம்பு சாதனை படைத்துள்ளார்.
பல ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் உள்ள சிம்பு, சூர்யா, ரஜினி ஆகியோரை ஒரே ஆண்டில் ஓரங்கட்டி சிம்பு படைத்துள்ள இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சிம்பு வெளியிட்ட தனது ஆத்மன் வீடியோவுக்கு வேறலெவல் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.