பிங்க் கலர் புடவையில் ஹாட் போஸ்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை மாளவிகாவின் தீபாவளி கிளிக்ஸ்...
தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை நடிகை மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் மாளவிகா பகிர்ந்துள்ளார்.
உன்னை தேடி படத்தின் வெற்றியை தொடர்ந்து மாளவிகாவுக்கு அடுத்தடுத்து வெற்றி வாய்ப்புகள் குவிந்தது. தொடர்ந்து ரோஜா வனம், ஆனந்த் பூங்காற்று, பூப்பறிக்க வருகிறோம் போன்ற படங்களில் நடித்தார். இதில் பூப்பறிக்க வருகிறோம் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
2000 முதல் 2003 வரை மாளவிகா நடித்த பல படங்கள் தோல்வியை தழுவின. ஆனால் அதே நேரம், வெற்றி கொடி கட்டு, சீனு போன்ற படங்கள் வெற்றி படங்களாக மாறியது. குறிப்பாக வெற்றிக்கொடி கட்டு படத்தில் முரளிக்கு ஜோடியாக மாளவிகா நடித்திருப்பார். மேலும் அப்படத்தில் இடம்பெற்ற ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கு பிரபலமானார் மாளவிகா.
இதனிடையே சூர்யாவின் பேரழகன், கம்ஹாசனின் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ரஜினியின் சந்திரமுகி போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்தார். மேலும் திருட்டு பயலே படத்தில் நடித்த மாளவிகா, தனது நடிப்பு திறனுக்காக பரவலான பாராட்டை பெற்றார்.
எனினும் அதன்பின்னர் மாளவிகாவுக்கு ஹீரொயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. வியாபாரி, சபரி, மணிகண்டா, குருவி போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்தார். பின்னர் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாலமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் கவனத்தை ஈர்த்தார் மாளவிகா.
தொடர்ந்து 2007-ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கோல்மால் என்ற படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வபோது தனது புகைப்படஙக்ளை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை நடிகை மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் மாளவிகா பகிர்ந்துள்ளார். அவரின் புகைப்படங்களுக்கு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.