Shruti Haasan : சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு... ‘நீயே அளந்துக்கோ’னு போட்டோ அனுப்பி ஷாக் கொடுத்த சுருதிஹாசன்
Shruti Haasan : பிசியான நடிகையாக வலம் வரும் சுருதி ஹாசன் அவ்வப்போது சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தமிழில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த போதும், அவருக்கு கோலிவுட்டில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் தற்போது பிறமொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி தற்போது இவர் கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சுருதி. இதுதவிர பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சுருதி ஹாசன் அவ்வப்போது சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அவருக்கு சில ஏடாகூடமான கேள்விகளும் வருவதுண்டு, அதனை வெறுத்து ஒதுக்காமல், அதற்கும் சரியான பதிலடி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை சுருதிஹாசன்.
அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடிய சுருதிஹாசனிடம், நெட்டிசன் ஒருவர், ‘உங்களது லிப் சைஸ் என்ன?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு லிப் சைஸ் என்று ஒன்று இருக்கிறதா என கேட்ட சுருதி, உடனடியாக செல்ஃபி ஒன்றை பதிவிட்டு லிப் சைஸை அளந்து கொள்ளுமாறு கூறி அந்த நபருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Actress Assault Case :நடிகை பலாத்கார வழக்கில் திடீர் டுவிஸ்ட்! டெலிட் செய்யப்பட்ட 11 ஆயிரம் வீடியோக்கள் மீட்பு