Actress Assault Case :நடிகை பலாத்கார வழக்கில் திடீர் டுவிஸ்ட்! டெலிட் செய்யப்பட்ட 11 ஆயிரம் வீடியோக்கள் மீட்பு
Actress Assault Case : நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களில் இருந்து டெலிட் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மீட்கப்பட்டுள்ளதாம்.
கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கி இருப்பதால் அவர் இந்த வழக்கில் இருந்து தப்ப முடியாது என கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் இதுவரை 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அதில், நடிகர் திலீப் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் நடிகர் திலீப் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நடிகர் திலீப்பின் மனைவியும், மலையாள நடிகையுமான காவ்யா மாதவனிடமும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களில் இருந்து டெலிட் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் லட்சக் கணக்கான போட்டோக்களும் சிக்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ உள்பட, பல ஆயிரம் வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை போலீசார் மீட்டு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதையும் படியுங்கள்... Vijay : என்னை தேடாதீர்கள்... லெட்டர் எழுதி வச்சுட்டு வீட்டைவிட்டு ஓடிப்போன விஜய் - பகீர் கிளப்பிய எஸ்.ஏ.சி!