கூலி படத்தால் இப்படியொரு வாழ்க்கையா – செம்மையா எஞ்ஜாய் பண்ணும் சௌபின் ஷாகீர்!
Shoubin Shahir Enjoy Coolie Movie Success : கூலி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கு நிலையில் படத்தில் நடித்த மலையாள நடிகர் சௌபின் ஷாகீர் தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து கூலி வெற்றியை கொண்டாடி வருகிறார்.

மனைவி, மகளுடன் கூலி வெற்றியை கொண்டாடி வரும் சௌபின் ஷாகீர்
Shoubin Shahir Enjoy Coolie Movie Success : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் தான் கூலி. முழுக்க முழுக்க ரஜினிக்காக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடி இல்லை என்பது சற்று வருத்தம் தான். இருந்த போதிலும் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான், சௌபின் ஷாகீர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
கூலி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
இதில், ரஜினிகாந்திற்கு பிறகு அதிகம் பேசப்பட்டது மலையாள நடிகரான சௌபின் ஷாகீரது நடிப்பு மற்றும் டான்ஸைப் பற்றி தான். ஒரு சில காட்சிகளில் மட்டும் வரும் நாகர்ஜூனாவிற்கு பதிலாக சௌபின் ஷாகிரை வில்லனாக நடிக்க வைத்திருக்கலாம். அந்தளவிற்கு படம் முழுவதும் சௌபின் ஷாகிர் டிராவல் பண்ணியிருப்பார். மேலும், தனக்கு கொடுத்த நடிப்பு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்று தனி முத்திரை பதித்துள்ளார்
சௌபின் ஷாகிர் நடித்த படங்கள்
இந்த நிலையில் தான் கூலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சௌபின் ஷாகீர் தனது குடும்பத்துடன் கூலி வெற்றியை கொண்டாடி வருகிறார். அவர், மனைவி மற்றும் மகளுடன் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ரெசார்ட்டிற்கு சென்று செம்மையாக எஞ்ஜாய் செய்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
மனைவி, குழந்தைகளுடன் ரெசார்ட்டிர்கு சென்ற சௌபின் ஷாகீர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். கூலியில் ரைஸிங் ஸ்டாராக உதயமான சௌபின் ஷாகீர் BMW XM என்ற சொகுசு காரை ரூ.3.30 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார். ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கொண்ட சௌபின் சமீபகாலமாக அற்புதமான கார் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சௌபின் ஷாகீர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, பிராண்ட் நியூ மினி கார் ஒன்றை வாங்கியிருந்தார். ஆம், மினி நிறுவனத்தின் கூப்பர் எஸ் ஜே சி டபிள்யூ காரை வாங்கியிருந்தார். இந்த காரை வாங்கும் போது தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் 6 நாட்களில் ரூ.418 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இந்தியா முழுவதும் ரூ.255.8 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இந்த ஆண்டில் அதிக வசூல் குவித்த படங்களில் கூலி படம் அதிக வசூல் குவித்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் கூலி படம் அதிக வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கார் வாங்கிய மலையாள நடிகர் சௌபின் ஷாகிர்
இந்த நிலையில் தான் இப்போது பிஎம்டபிள்யூ எக்ஸ் 6 என்ற சொகுசு காரை வாங்கியிருக்கிறார். இந்த காரின் விலை மட்டும் ரூ.3.30 கோடியாகும். இதற்கு முன்னதாக அவரிடம் Lexus ES, Mahindra Thar, Sedan Mercedes Benz E Class, மற்றும் BMW R 1250 GS Adventure என்ற பைக் ஒன்றையும் வைத்திருக்கிறார்.