மே 1-ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்படுகிறதா சீரடி சாய்பாபா கோவில்..? என்ன காரணம்... முழு தகவல் இதோ!
இந்தியா மட்டும் இன்றி, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள், மதம், மொழி, இனம் கடந்து வந்து, வழிபடும் சீரடி சாய் பாவாவின் திருத்தலம் மே 1 ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உயிருடன் வாழ்ந்த கடவுள் என பக்தர்கள் போற்றும், சாய் பாபா சமாதியடைந்த பின்னர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சீரடியில் 1922 ஆம் ஆண்டு சிறிய கோவிலாக கட்டப்பட்ட சீரடி சாய் பாபா கோவில், தற்போது, அந்த கோவிலுக்கு வரும் லட்ச கணக்கான பக்தர்களுக்கு மன கவலைகளை போக்கி அற்புதம் செய்யும் கோயிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு வரும் பக்கதர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் 24 மணிநேரமும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு பின், சீரடி சாய் பாபாவின் கோவிலுக்கு வரும், பக்தர்கள் எண்ணிக்கை தான் அதிகம் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. சீரடி சாய்பாபாவை வழிபட, நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் படையெடுத்து வருவதால்... இந்தியாவின் அணைத்து ரயில் நிலையங்களில் இருந்தும், சீரடிக்கு ரயில்கள் உள்ளது.
அதே போல் விமானசேவையும் துவங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, முதல் ஷீரடி விமான சேவை செயல்பட்டு வருகிறது. இதனை பாதுகாக்கும் பொறுப்பு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது, சாய்பாபா கோயிலைப் பாதுகாக்கும் பொறுப்பும் CISFக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து, இதற்க்கு, தற்போது கோவிலின் நிர்வாகத்தை கவனித்து வரும் சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை மறுப்பு தெரிவித்து, மே 1 ஆம் தேதி முதல், காலவரையின்றி கோவிலை மூட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல், சாய் பாபா புதர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க, சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருவதால், அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.