காணாமல் போன பிரபல நடிகர்... கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு..!

First Published Jan 12, 2021, 6:07 PM IST

காணாமல் போன பிரபல நடிகர்... கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு..!

பிரபல நடிகர் ஒருவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது உடல் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில்,  இங்கிலீஷ் மீடியம், காக் ஷி அம்மினி பில்லா,  உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், மலையாள சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் ஜனார்த்தனன் மூழிக்கரா. மேடை நாடகங்களில் நடித்து பிரபலமான பின்னர் திரையுலகில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.

60 வயதாகும் நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கராவை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது மட்டும் இன்றி, பல இடங்களில் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் திடீர் என கிணற்றில் ஜனார்த்தனன் மூழிக்கரா உடல் கிடப்பது போல் இருப்பதை அறிந்து, உடனடியாக... அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த அவர்கள், உடலை மீட்டனர். மேலும் வீட்டின் பின்னால் இருந்த கிணற்றில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து உடலை யாரேனும் வீசி சென்றார்களா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல், தன்னுடைய மூன்று சகோதரர்கள் குடும்பத்துடன் ஜனார்த்தனன் மூழிக்கரா வசித்து வந்துள்ளார். இவரது இந்த திடீர் மரணம் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?