தாய் சாவில் சடங்கை கூட செய்ய விடாதவர் பாலா! என் சாபம் தான் இப்படி அனுபவிக்கிறாரு! நடிகர் பேச்சால் பரபரப்பு!
இயக்குனர் பாலாவுக்கு, வயிறு எரிந்து சாபம் விட்டேன் என 'நான் கடவுள்' பட நடிகர் மற்றும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில், தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பாலா. ஒரே மாதிரியான கதைகளை இயக்காமல், ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தையும் மிகவும் சவாலான கதாபாத்திரங்களுடன் இயக்குவது இவருடைய தனித்துவம் என கூறலாம்.
இந்நிலையில் இயக்குனர் பாலா குறித்து அவர் படத்தில் நடித்துள்ள நடிகரும், தயாரிப்பாளருமான அழகன் தமிழ்மணி கூறியுள்ள தகவல் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. மலையாளத்தை பல படங்களை தயாரித்து உள்ளவர் அழகன் தமிழ்மணி.
என்னை மன்னித்து விடுங்கள்... பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையேடு ஜனனி போட்ட பதிவு!
இவருடைய வீடு பாலாவின் ஆபீஸ் பக்கத்தில் இருப்பதால், இவரை பார்த்த இயக்குனர் பாலா தான் இயக்கும் படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளார். அதன் படி ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய 'நான் கடவுள்' படத்தில், ஆர்யாவின் தந்தை கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்திருந்தார். இந்த படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் பாலாவிடம் இவராக சென்று வாய்ப்பு கேட்கவில்லை, இந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் பாலா தான் அவரை வற்புறுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
'நான் கடவுள்' படத்தில் என்னுடைய மனைவி என்னை அடிப்பது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்ட போது, அந்த நடிகையே என்னை மெதுவாக அறைந்தாலும் இயக்குனர் பாலா, மிகவும் சத்தமாக அந்த நடிகையை திட்டினார் வேகமாக அறையவேண்டும் என கூறினார். பின்னர் அந்த பெண் ஓங்கி அறைந்ததில் நான் உண்மையிலேயே மயங்கி கீழே விழுந்தேன்.
அதேபோல் தண்ணீருக்குள் குதிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது, அப்போது பலமுறை அந்த தண்ணீரில் என்னை விழ வைத்தார் பாலா. நான் ஒவ்வொரு முறை குதிக்கும் போதும், என் கால்களில் கற்கள் குத்தி காயமாகிக் கொண்டே இருந்தது. ஆனால் அதை பற்றி எல்லாம் பாலா கண்டு கொள்ளவே இல்லை. இறுதியில் உண்மையில் நான் கோபம் வந்து, செத்துப் போகணும் என்ற முடிவில் குதிக்கும் போது தான்.. அந்த டேக்கை பாலா ஓகே செய்தார். என மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் தன்னுடைய தாய் திடீரென படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இறந்து விட்டதாகவும், எனவே அவருடைய ஈமச்சடங்குகளில் குடும்ப வழக்கப்படி மொட்டை அடித்து, தாடியை மழிக்க வேண்டும் என பாலாவிடம் கூறிய போது... ஏற்கனவே படம் மூணு வருஷம் இழுத்தடிச்சாச்சு, இதுக்கு அப்புறமும் மூணு வருஷம் ஆகணும்னா நீங்க போய் மொட்டை அடிச்சுக்கோங்க என மிகவும் கனத்த குரலில் கோபமுடன் கூறினார்.
Director Bala
நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற எண்ணத்தில், என்னால் இந்த படத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என மொட்டை அடிக்கும் சடங்கை தவிர்த்து விட்டேன். ஆனால் அந்த நிமிடம் என் வயிறு எரிந்து பாலாவுக்கு நான் சாபம் விட்டேன். அதன் பலனை தான் தற்போது இயக்குனர் பாலா அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாலா மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று, சரியான படங்கள் அமையாததால் மன உளைச்சல் போன்றவற்றால் தவித்து வருகிறார். அதேபோல் சூர்யாவை வைத்து இவர் இயக்கி வந்த 'வணங்கான்' படமும் திடீரென கைவிடப்பட்டது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் பாலா, படத்தை தயாரித்த சூர்யாவுக்கு சுமார் 10 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தியதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.