ஏதாவது செய்... பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற கெஞ்சுகிறாரா ஜி.பி.முத்து! வெளியான அதிர்ச்சி தகவல்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தற்போது அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஜிபி முத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என கெஞ்சுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், கிடைக்கும் பிரபலத்தால் மிகவும் ஃபேமஸ் ஆகிவிடலாம் என்கிற நோக்கத்தில் தான் வெளிநாடுகளை சேர்ந்த பிரபலங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கடந்த சீசன்களை விட, இந்த சீசனில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் என்னவோ... பலரும் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்த்து வருகிறார்கள். மேலும் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவுக்கு தான், மற்ற போட்டியாளர்களை விட அதிக ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் செய்திகள்: லோ நெக் கவர்ச்சியில்.. கலர் ஃபுல் உடையணிந்து கவர்ச்சி விருந்து வைக்கும் மாளவிகா மோகனன்..! செம்ம ஹாட் போட்டோஸ்!
இவர் எதார்த்தமாக பேசுவது கூட சில சமயங்களில் காமெடியாக மாறி விடுகிறது. அதே போல் இவரது உடல் மொழியும் இவருக்கு மிகப்பெரிய ப்ளஸ் என கூறலாம். மற்ற போட்டியாளர்களை விட இவர் எவ்வித நடிப்பும் இல்லாமல் எப்போதும் போல் இருப்பதால், இவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என இப்போதே சிலர் கணித்து கூற துவங்கி விட்டனர்.
ஒரு வாரம் மிகவும் ஆக்ட்டிவாக இருந்த ஜிபி முத்து, இந்த வாரம் தலைவர் என்கிற போஸ்டிற்கு வந்து விட்டாலும் கூட, அவருடைய குடும்பம் மற்றும் குழந்தைகளை மிகவும் மிஸ் செய்வது அவரது பேச்சின் மூலமே தெரிகிறது.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில்... முதலில் ஜெயராம் இந்த தோற்றத்தில் தான் நடிக்க இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!
இந்நிலையில் ஜிபி முத்து அவரது சகோதரர் ஆனந்த-யை பிக்பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியேற உதவி செய்யுமாறும் கெஞ்சியுள்ளார். ஜி.பி.முத்துவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்து வரும் நிலையிலும் இவர் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.