பண்ணுனதெல்லாம் பாழா போச்சு! இறங்கி வராத ரக்ஷிதா... டைவர்ஸுக்கு தயாரான தினேஷ்? வெளியான ஷாக்கிங் தகவல்!
சீரியல் நடிகை ரக்ஷிதாவுடன் வாழ விரும்புவதை பல விதத்தில், அவரின் கணவர் தினேஷ் வெளிப்படுத்திய போதிலும், அதனை கண்டுகொள்ளாமல் ரக்ஷிதா தொடர்ந்து அவரை புறக்கணித்து வந்த நிலையில், அதிருப்தியில் டைவர்ஸுக்கு தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையில் சரி... உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டு மிகவும் சந்தோஷமாக தங்களின் வாழ்க்கையை துவங்கும் பிரபலங்கள், அனைவரும் கடைசி வரை ஒன்றாகவே வாழ்க்கை என்னும் படகில் பயணிக்கிறார்களா? என்றால் அது சந்தேகமே.
சிலர் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக பலரும் பொறாமை கொள்ளும் அளவிற்கு வாழ்ந்தாலும், பின்னர் அவர்களுக்குள் ஏற்படும், கருத்து வேறுபாடு, ஈகோ போன்றவற்றை எப்படி சரி செய்வது என தெரியாமல் , அந்த பிரச்னையை பேசி... பேசி... பிரச்சனையாகி பின்னர் டைவர்ஸ் என்கிற முடிவை கையில் எடுக்கிறார்கள்.
அந்த வங்கியில் பிரிவோம் சந்திப்போம் என்ற முதல் சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ரக்ஷிதா மற்றும் தினேஷ். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து, ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவருமே திரையுலகில் கவனம் செலுத்தி வந்த நிலையில், திடீர் என ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவர்கள் இருவரும் பிரிந்து வாழும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.
ஒருசில மாதங்களுக்கு முன்பே ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவரும் விவாகரத்து பெற்று பிரியா உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் இது குறித்து ரக்ஷிதா தரப்பில் இருந்து எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும், தினேஷ் தங்கள் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனை சாதாரணமாக கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரச்சனை தான், கண்டிப்பாக பேசி... தீர்த்துக்கொண்டு மீண்டும் சந்தோஷமாக வாழ்வோம் என தெரிவித்திருந்தார்.
மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட ரக்ஷிதாவுக்கு, தொடர்ந்து தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்து கொடுத்து வந்தார். ரக்ஷிதாவிடம் கொஞ்சம் எல்லை மீறி நடந்து கொண்ட, ராபர்ட் மாஸ்டருக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தது மட்டும் இன்றி, அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கோவத்தை வெளிப்படுத்தினார்.
பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது கணவர் தினேஷ் பற்றி, ரக்ஷிதா எதுவும் பேசவில்லை என்றாலும் வெளியே வந்தவுடன் மனம் மாறி அவரை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மனம் மாறியதாக தெரியவில்லை. திடீர் ரக்ஷிதாவின் நண்பர்களை தூது விட்டு பார்த்தும் அவர் மனம் இறங்கியதாக தெரியவில்லை.
நரிக்குறவ சமுதாயத்தினரை திரையரங்கம் உள்ளே அனுமதிக்காத ரோகினி தியேட்டர் ஊழியர் மீது வழக்கு பதிவு!
ரக்ஷிதாவுடன் சேர பண்ணுனதெல்லாம் பாழா போனதால்... தற்போது விவாகரத்து முடிவை கையில் எடுத்துள்ளதாகவும், இது குறித்து வழக்கறிஞர்களை சந்தித்து பேசி வருவதாகவும் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரக்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், தினேஷ் 'ஈரமான ரோஜா 2 ' மற்றும் 'கார்த்திகை தீபம்' ஆகிய சேரியல்க்ளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.