பால் வண்ண மேனியை காட்டி பக்குனு ஆக்கிய வாணி போஜன்! கிக் ஏறிப்போய் வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகர்கள்!
நடிகை வாணி போஜன், அடுத்தடுத்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ் என பிஸியாக நடித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு.. அதீத கவர்ச்சியால் ரசிகர்களை கிக் ஏற்றும் வகையில் எடுத்துக்கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து, திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் ஒரு சிலரே. அந்த லிஸ்டில், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானிக்கு பிறகு இடம்பிடித்தவர் தான் நடிகை வாணி போஜன்.
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள், மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமான இவர், ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தான் பேமஸ் ஆனார்.
நரிக்குறவ சமுதாயத்தினரை திரையரங்கம் உள்ளே அனுமதிக்காத ரோகினி தியேட்டர் ஊழியர் மீது வழக்கு பதிவு!
இந்த படத்தில் மீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார் வாணி போஜன். குறிப்பாக ஹீரோயினாக நடித்த, ரித்திகா சிங் நடிப்பை விட, வாணி போஜன் கதாபாத்திரம் தான் பாராட்டுக்களை பெற்றது. அடுத்தடுத்து அரை டஜன் படங்கள் இவர் கைவசம் இருந்தாலும், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகளை இன்னும் கைப்பற்றமுடியவில்லை.
வழக்கமான ஹீரோயின்கள் போல்... போட்டோ ஷூட் மூலம் திரைப்பட வாய்ப்பை கைப்பற்ற முனைப்பு காட்டி வரும் வாணி போஜன், தற்போது பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, ஸ்டாப் லெஸ் உடையில்... பால் வண்ண மேனியை காட்டி எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.