எந்த தொழிலும் தாழ்வானது இல்லை... கல்லூரி படிக்கும் போது ஓட்டலில் எஸ்.ஜே.சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா..?
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய கல்லூரி காலங்களில் ஓட்டலில் வேலை செய்தது குறித்து பகிர்துகொண்டுள்ள தகவல், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உதவி இயக்குனராக இருந்து, பின்னர் இயக்குனராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான முதல் படமான 'வாலி' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், முதல் படத்திலேயே ஒட்டு மொத்த தமிழ் இயக்குநர்களாலும் கவனிக்க பட்ட இயக்குனராக மாறினார். அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான இந்த படம், தற்போது வரை, அஜித் ரசிகர்களின் ஃபேவரட் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
அஜித்தை தொடர்ந்து, விஜய்யுடன் கூட்டணி அமைத்த எஸ்.ஜே.சூர்யா, இயக்கத்தில் வெளியான 'குஷி' திரைப்படம் விஜய்க்கு அல்டிமேட் ஹிட்டாக அமைத்தது. விஜய் - ஜோதிகாவின் காம்பினேஷனும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் முதல், கட்டிப்பிடி கட்டிப்பிடி பாடல் வரை, அனைத்துமே... தற்போது வரை விஜய் ரசிகர்களால் கொண்டாட பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: உடல் எடை கூடிய ஆலியா பட்... பேபி பம்ப் தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ரன்பீருடன் கொடுத்த லேட்டஸ்ட் போஸ்!
இரண்டு ஹிட் படங்களை கொடுத்த பின்னர் தானே ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். ஆரம்பத்தில் இவர் நடித்த நியூ படத்திற்கு மட்டுமே வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்தடுத்து வெளியான படங்கள், தோல்வியை சந்தித்தது. எனவே சில காலம் திரைப்படம் இயக்குவதற்கு கேப் விட்ட, எஸ்.ஜே.சூர்யா பின்னர் நடிகராக அறிமுகமாகி நடிக்க துவங்கினார்.
அந்த வகையில் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லத்தனத்தை வெளிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா மீண்டும், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி நாயகனாக மாறினார்.
மேலும் செய்திகள்: நடிகர் விஜய் சேதுபதியின் உடன் பிறந்த சகோதரி ஜெயஸ்ரீயை யார் தெரியுமா? ஒரு தொழிலதிபரா.. பலரும் அறிந்திடாத தகவல்!
தற்போது விஜய் சேதுபதி பாணியில், ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என நடித்து அசத்தி வரும் எஸ்.ஜே.சூர்யா கல்லூரி காலங்களில், பார்ட் டைம் வேலை செய்து கொண்டே படித்தவர் தான். ஒரு உடலில் டேபிள் துடைக்கும் பணியை செய்ததாகவும், எனவே எந்த தொழில் செய்தலும் அதில் உயர்ந்தது - தாழ்ந்தது என்கிற பாகுபாடு கிடையாது என கூறியுள்ளார்.
குறிப்பாக தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் அந்த ஓட்டலுக்கு சாப்பிட வந்தால் கூட, எந்த கூச்சமும் - தயக்கமும் இன்றி அந்த பணியை செய்தேன் என தற்போதைய இளைஞர்களுக்கு தேவையான ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் செய்திகள்: 'பாரிஜாதம்' பட ஹீரோயின்... நடிகர் பாக்யராஜ் மகள் சரண்யாவா இது? அடையாளமே தெரியலையே... லேட்டஸ்ட் போட்டோ!