சென்னையில் 1960-ல் வெள்ளம் வந்த போது தன் வீட்டில்.. தன் மேற்பார்வையில்.. சமைத்த சிவாஜி கணேசன்! அரிய புகைப்படம்
கடந்த இரு தினங்களாக சென்னையில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக, சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதே போல் 1960 ஆம் ஆண்டு மழை பெய்த போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னுடைய வீட்டில், தன்னுடைய மேற்பார்வையில் சமைத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்து வருகிறது. அதனால் சென்னையை சுற்றியுள்ள ஏரி குளங்கள் விரைவாக நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் தற்போது திறந்துவிடப்படுட்டுள்ளது.
தண்ணீர் சூழ்ந்த ஆபத்தான பகுதிகளில் வசிப்போர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்பூரப்படுத்தி வருகிறார்கள்.
மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியும் நடந்து வருகிறது. இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருவதால்... மேலும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர் சென்னை வாசிகள்.
தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில், தற்போது மின்சாரம், தண்ணீர் என அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே போல் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்த போது... ஒரு வாரத்திற்கு மேல் அடிப்படை தேவைகளை கூட செய்து கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
இதே போன்ற பெருவெள்ளம், 1960 ஆம் ஆண்டு சென்னையை சூழ்ந்த போது, மக்கள் பசி தீர்க்கும் பணியில் முதலில் இறங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.
மக்கள் ஒருவர் கூட பசி பட்டினியோடு இருக்க கூடாது என்று, மூன்று வேளையில் தன் வீட்டில் தன் மேற்பார்வையில் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைத்து மக்களுக்காக வழங்கினார்.
குறிப்பாக, 1960 -ல் மக்களின் வாழ்க்கை இயல்புக்கு திரும்பும் வரை, சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டில் இருந்து சமைத்த உணவுகளே பல மக்களின் பசியை ஆற்றியது. அப்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது... அந்த புகைப்படம் இது தான்.