இரண்டே வாரத்தில் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட கேம் சேஞ்சர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி லீக் ஆகி உள்ளது.
Game Changer
இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரிலீஸ் ஆன படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். இப்படத்தில் நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜுடையது. அதற்கு திரைக்கதை அமைத்து ஷங்கர் தன் ஸ்டைலில் இயக்கி இருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஜனவரி 10ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது.
Shankar Directional Game Changer Movie
கேம் சேஞ்சர் திரைப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. குறிப்பாக இப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் செல்வழித்து இருக்கிறார்கள். இப்படி பணத்தை வாரி இறைத்து எடுக்கப்பட்ட கேம் சேஞ்சர் திரைப்படம் வசூலில் மரண அடி வாங்கி இருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், இதுவரை புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூலை கூட எட்டவில்லை. புஷ்பா 2 படம் முதல் நாளிலேயே ரூ.292 கோடி வசூலித்து இருந்தது.
இதையும் படியுங்கள்... 'கேம் சேஞ்சர்' தோல்விக்கு இது தான் காரணம்; ரசிகர்கள் சொல்வது என்ன?
Game Changer Movie Leaked Online
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதில் பிளாஷ்பேக் காட்சியில் வரும் ராம்சரணின் தந்தை கதாபாத்திரம் அக்மார்க் ஷங்கர் ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் மற்ற காட்சிகளும் அதுபோல் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால், கேம் சேஞ்சர் பெரியளவில் சோபிக்கவில்லை. இப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. கேம் சேஞ்சர் படம் கிடத்தட்ட 200 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Game Changer OTT Release Date
புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி 50 நாட்களைக் கடந்தும் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆன இரண்டே வாரங்களில் வாஷ் அவுட் ஆகி உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் ஹெச்.டி பிரிண்ட் இணையத்தில் லீக்காகிவிட்டதால், வேறுவழியின்றி கேம் சேஞ்சர் படத்தை ஓடிடிக்கு பார்சல் செய்து அனுப்பிவிட்டதாம் படக்குழு. அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் 14ந் தேதி காதலர் தின ஸ்பெஷலாக கேம் சேஞ்சர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாம். இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மதுரை கலெக்டரின் கதையை படமாக்கிய ஷங்கர்! யார் இந்த ரியல் ‘கேம் சேஞ்சர்' சேஷன்?