MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அலைபாயும் அன்போடு; 24 வருடத்துக்கு பின் தன் சினேகிதனை சந்தித்த ஷாலினி அஜித்!!

அலைபாயும் அன்போடு; 24 வருடத்துக்கு பின் தன் சினேகிதனை சந்தித்த ஷாலினி அஜித்!!

நடிகை ஷாலினி தன்னுடன் அலைபாயுதே படத்தில் ஜோடியாக நடித்த நடிகர் மாதவனை 24 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 28 2024, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shalini, Madhavan

Shalini, Madhavan

தமிழ் சினிமாவில் வெற்றியை மட்டுமே ருசித்த ஒரு நடிகை என்றால் அது ஷாலினி தான். சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்துவந்த ஷாலினி, ஹீரோயினாக தமிழில் நடித்தது வெறும் 5 படங்கள் தான். இந்த ஐந்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இதில் அவர் முதன்முதலில் நடித்த படம் காதலுக்கு மரியாதை. அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி. இப்படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு என்கிற படத்தில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் ஷாலினி. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Alaipayuthey

Alaipayuthey

தொடர்ந்து 2 படம் விஜய்யுடன் நடித்த ஷாலினிக்கு மூன்றாவதாக அஜித் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அவர்கள் இருவரும் முதன்முறையாக அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்படம் ஹிட்டானதோடு, அவர்கள் இருவரின் காதலுக்கும் பிள்ளையார் சுழி போட்டது. அமர்க்களம் படத்தில் நடித்து முடித்த கையோடு ஷாலினியை கரம்பிடித்தார் அஜித்குமார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்த ஷாலினி, அதுவரை கமிட்டான படங்களில் மட்டும் நடித்து முடித்தார்.

இதையும் படியுங்கள்... ஷாலினி பிரசவத்தை வீடியோ எடுத்த அஜித்துக்கு கிடைத்த பாராட்டு; இர்பானுக்கு கிடைக்காதது ஏன்?

34
Alaipayuthey Movie

Alaipayuthey Movie

அந்த வகையில் 2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவனுக்கு ஜோடியாக அலைபாயுதே, பிரசாந்த் உடன் பிரியாத வரம் வேண்டும் ஆகிய இரண்டு படங்கள் தான் திருமணத்துக்கு பின் அவர் நடிப்பில் வெளியான படங்களாகும். இதில் அலைபாயுதே படம் ஷாலினியின் கெரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாகும். தமிழ் திரையுலகில் காதல் படம் எடுக்கும் பலருக்கும் அப்படம் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. அப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி.

44
Shalini meet Madhavan

Shalini meet Madhavan

அலைப்பாயுதே படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது ஷாலினி - மாதவன் இடையேயான கெமிஸ்ட்ரி தான். அப்படத்தின் அவர்கள் இருவரின் ரொமான்ஸ் காட்சிகள் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருக்கும். அந்த ஜோடி அதன் பின் மீண்டும் சேர்ந்து நடிக்க மாட்டார்களா என ஏங்கும் அளவுக்கு அவர்களின் நடிப்பு இருந்தது. இந்த நிலையில், தற்போது 24 ஆண்டுகளுக்கு பின்னர் ஷாலினியும் மாதவனும் மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது மாதவன் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷாலினி. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எவர்கிரீன் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அஜித் மனைவி ஷாலினி பாடிய ஒரே ஒரு பாட்டு; பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கதை தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!
Recommended image3
Jailer 2 : மொழி சர்ச்சையில் சிக்கிய அல்ல பொலெலோ பாடல்... பதறிப்போய் விளக்கம் கொடுத்த அருண்ராஜா காமராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved