மொட்டை பாஸ் லுக்கில் ஷாருக்கான்... சர்ப்ரைஸாக வெளியான ஜவான் படத்தின் மாஸ் போஸ்டர்
அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கு ஜவான் படத்தில் இடம்பெறும் ஷாருக்கானின் மொட்டை பாஸ் லுக் உடன் கூடிய மாஸ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது ஜவான். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு, தீபிகா படுகோனே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்துள்ளார். இப்படம் மூலம் அவர் இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஜவான் படத்தின் ரிலீஸ் பணிகள் ஒருபுறம் மூம்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்... மாமன்னனிடம் இருந்து வந்த மாவீரன் படத்தின் முதல் விமர்சனம்... என்ன உதயநிதி இப்படி சொல்லிட்டாரு?
மாஸ் காட்சிகளின் தொகுப்பாக அமைந்திருந்த இந்த முன்னோட்டத்தில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் நடிகர் ஷாருக்கான் மொட்டைத்தலையுடன் வந்து மாஸ் காட்டி இருந்தார். இதுபோன்று படத்தில் அவருக்கு ஏராளமான கெட் அப்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜவான் படம் குறித்து ரசிகர்களுடன் டுவிட்டரில் இன்று கலந்துரையாடினார் ஷாருக்கான். அப்போது ஏராளமான ரசிகர்கள் ஜவான் படத்தின் அடுத்த அப்டேட்டை கேட்டு வந்த நிலையில், மொட்டை பாஸ் கெட் அப்புடன் கூடிய சிறப்பு போஸ்டர் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் ஷாருக்கான். அவர் வெளியிட்ட அந்த புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா பயங்கரமா அடிக்குறாங்க... உஷாரா இருந்துக்கோ! விக்னேஷ் சிவனை அலர்ட் பண்ணிய ஷாருக்கான்