பிகில் கிளப்ப ரெடியா நண்பா... ஷாருக்கானின் ஜவான் டிரைலரை வெளியிடும் தளபதி விஜய்..!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தின் டிரைலர் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், அதனை விஜய் வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
atlee kumar
ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜவான். இப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார். கோலிவுட்டில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என நான்கு பிரம்மாண்ட படங்களை இயக்கிய அட்லீ, இப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார்.
jawan
ஜவான் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்திற்கான அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடத் தயாராகி வருகின்றன. அதன்படி முதல் அப்டேட்டாக அப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
இதையும் படியுங்கள்... சினிமாவில் நன்கு சம்பாதித்தும்... சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டிலேயே காலத்தை ஓட்டும் பிரபலங்கள் இத்தனை பேரா?
தற்போது டிரைலர் அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டு ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுதவிர இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தான் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்கள் மூலம் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கு முன் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் படத்தின் டிரைலரையும் விஜய் தான் வெளியிட்டு இருந்தார்.
அதுமட்டுமின்றி ஜவான் படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழு சீக்ரெட்டாகவே வைத்துள்ளது. அதுகுறித்த காட்சிகள் எதுவும் டிரைலரில் வெளியிடுவார்களா அல்லது படம் ரிலீஸ் வரை அதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... நாளுக்கு ஒரு கெட்டப் மாத்தினா எப்படி? அப்போ சீயான் 62 ரெடியா? - லோகேஷ் AD-யுடன் உருவாகும் ஒரு கூட்டணி!