MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சினிமாவில் நன்கு சம்பாதித்தும்... சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டிலேயே காலத்தை ஓட்டும் பிரபலங்கள் இத்தனை பேரா?

சினிமாவில் நன்கு சம்பாதித்தும்... சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டிலேயே காலத்தை ஓட்டும் பிரபலங்கள் இத்தனை பேரா?

சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டாலும், இன்னும் வாடகை வீட்டில் வசிக்கும் பிரபலங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 08 2023, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கவின்

கவின்

சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் கவின். இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்ற கவின் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக ஜொலித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன டாடா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்துக்கு பின்னர் கவினுக்கான மார்க்கெட் உயர்ந்து அவர் சம்பளத்திலும் கோடியை நெருங்கி விட்டாலும், அவருக்கு இன்னும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.

26
கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு

இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. இதையடுத்து பருத்திவீரன், தாமிரபரணி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பேமஸ் ஆன கஞ்சா கருப்பு டாக்டர் பெண்ணை திருமணம் செய்து சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆனார். ஆனால் அதன்பின்னர் படம் தயாரிக்க ஆசைப்பட்டு நிறைய கடன் வாங்கி வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட அவர், தற்போது வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறாராம்.

36
எதிர்நீச்சல் மாரிமுத்து

எதிர்நீச்சல் மாரிமுத்து

மாரிமுத்து எதிர்நீச்சல் தொடர் மூலம் பேமஸ் ஆனாலும், இவர் சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இயக்குனர் வஸந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் 2008-ம் ஆண்டு வெளிவந்த கண்ணும் கண்ணும் என்கிற படத்தை இயக்கியும் இருந்தார். அந்த படம் கைகொடுக்காததால் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த மாரிமுத்துக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவர் வாடகை வீட்டில் வசித்து வந்தாலும், தற்போது சென்னையில் இடம் வாங்கி சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வருகிறாராம்.

இதையும் படியுங்கள்... மீண்டும் இணையும் மாமன்னன் கூட்டணி... வடிவேலுவை நாயகனாக வைத்து மாரி செல்வராஜ் செய்ய உள்ள அடுத்த சம்பவம்

46
பார்த்திபன்

பார்த்திபன்

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பேமஸ் ஆனவர் தான் பார்த்திபன். இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக படம் இயக்கி பல்வேறு விருதுகளை வென்றுள்ள பார்த்திபன், தலைசிறந்த நடிகராகவும் பல்வேறு படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். இப்படி பெயர், புகழோடு இருந்தாலும், தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறாராம் பார்த்திபன். 

56
ஷகீலா

ஷகீலா

மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் ஷகீலா. அந்த காலத்தில் மோகன்லால், மம்முட்டிக்கு நிகராக இவர் நடித்த படங்கள் ஓடின. இதனால் இவருக்கு லட்ச லட்சமாக காசும் கிடைத்துள்ளது. அந்த காசையெல்லாம் வைத்திருந்தால் வருமான வரித்துறை ரெய்டு வந்துவிடும் எனக்கூறி அவரது உறவினர்கள் அவரிடம் இருந்த காசையெல்லாம் வாங்கி ஏமாற்றிவிட்டார்களாம். இதனால் சொந்தமாக வீடு எதுவும் இல்லாமல் தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசிக்கிறாராம் ஷகீலா.

66
விஜயலட்சுமி

விஜயலட்சுமி

பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் தான் விஜயலட்சுமி. இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்த இவருக்கு பின்னர் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனிடையே நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய விஜயலட்சுமி, தனக்கு சொந்தமாக வீடு கூட இல்லை என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... நாளுக்கு ஒரு கெட்டப் மாத்தினா எப்படி? அப்போ சீயான் 62 ரெடியா? - லோகேஷ் AD-யுடன் உருவாகும் ஒரு கூட்டணி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image2
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image3
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved