MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய், ரஜினியை விட 13 மடங்கு அதிக சொத்துக்கு அதிபதி! இந்தியாவின் பணக்கார நடிகர் இவரா?

விஜய், ரஜினியை விட 13 மடங்கு அதிக சொத்துக்கு அதிபதி! இந்தியாவின் பணக்கார நடிகர் இவரா?

இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்கார நடிகர்கள் பற்றியும் அவர்களின் சொத்து மதிப்பு பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

3 Min read
Ganesh A
Published : Aug 14 2024, 02:42 PM IST| Updated : Aug 14 2024, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
top 10 richest actors

top 10 richest actors

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதுண்டு. முன்னணி நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை தாண்டி அவர்கள் அணியும் ஆடை, அவர்கள் வைத்திருக்கும் சொகுசு கார்கள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அதுமட்டுமின்றி நடிகர்களின் சொத்து மதிப்பு பற்றியும் அதிகம் இணையத்தில் தேடப்படுவதுண்டு. அந்த வகையில் இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்கார நடிகர்களின் லிஸ்டை தற்போது பார்க்கலாம்.

211
shah rukh khan

shah rukh khan

ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் தான் பணக்கார நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.6300 கோடி. அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜவான், பதான், டங்கி ஆகிய மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதைத்தொடர்ந்து கிங் என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஷாருக்கான்.

311
Salman Khan

Salman Khan

சல்மான் கான்

ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் நடிகர் என்றால் அது சல்மான் கான் தான். அவரது சொத்து மதிப்பு ரூ.2900 கோடி. அவர் நடிப்பில் தற்போது சிக்கந்தர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தில் சல்மான் கான் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

411
Akshay Kumar

Akshay Kumar

அக்‌ஷய் குமார்

பணக்கார் நடிகர்கள் லிஸ்ட்டில் மூன்றாம் இடம் பிடித்திருப்பவர் அக்‌ஷய் குமார். அவரது சொத்து மதிப்பு ரூ.2500 கோடியாம். அண்மையில் சூர்யா தயாரிப்பில் அவர் நடித்த சர்பிரா திரைப்படம் வெளியானது. இது தமிழில் சுதா கொங்கரா இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட்டான சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

511
Aamir Khan

Aamir Khan

அமீர்கான்

டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளவர் நடிகர் அமீர்கான். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1862 கோடியாம். இவர் நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து ஹிட்டான மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அமீர்கான் கைப்பற்றினார். அப்படத்தில் அவரே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

611
Thalapathy Vijay

Thalapathy Vijay

தளபதி விஜய்

பணக்கார நடிகர்கள் லிஸ்ட்டில் டாப் 5-ல் இடம்பிடித்த ஒரே ஒரு தென்னிந்திய நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். அவரது ரூ.474 கோடி நிகர சொத்து மதிப்போடு 5வது இடத்தில் உள்ளார். அவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி உள்ளது. அப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... ஜெயலலிதாவின் முதல் பட அனுபவத்தில் மறைந்திருக்கும் ரகசியம்! திரையரங்கை விட்டு வெளியேற்றியதன் பின்னணி?

711
Rajinikanth

Rajinikanth

ரஜினிகாந்த்

விஜய்க்கு அடுத்த படியாக ரூ.430 கோடி சொத்துக்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது வேட்டையன், கூலி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

811
Allu Arjun

Allu Arjun

அல்லு அர்ஜுன்

தெலுங்கு திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.350 கோடி சொத்துக்களுடன் பணக்கார நடிகர்கள் பட்டியலில் 7ம் இடம் பிடித்து இருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

911
Prabhas

Prabhas

பிரபாஸ்

பாகுபலி என்கிற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரபாஸ். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.241 கோடி இருக்குமாம். அவர் இந்த பட்டியலில் 8ம் இடம் பிடித்திருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது ராஜாசாப், கல்கி 2 ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

1011
Ajithkumar

Ajithkumar

அஜித்குமார்

பணக்கார நடிகர்கள் பட்டியலில் நடிகர் அஜித்குமார் 9வது இடத்தில் இருக்கிறார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.196 கோடி இருக்குமாம். அவர் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

1111
Kamalhaasan

Kamalhaasan

கமல்ஹாசன்

இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் லிஸ்ட்டில் கமல்ஹாசன் 10வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி இருக்குமாம். அவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். 

இதையும் படியுங்கள்... Watch | இந்தியன் - 2 வசூலை முந்திய ராயன்? காரணம் என்ன?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஷாருக் கான்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved