Shah Rukh Khan: புதிய மெய்காப்பாளரை தேடும் ஷாருகான்... ஏன்? ரவி சிங் சம்பளம் ஒரு மாதத்திற்கு இத்தனை லட்சமா..!
ஷாருக்கானின் (Shah Rukh khan) மெய்காப்பாளராக இருந்த ரவி சிங் தற்போது ஆர்யன் கானை (Aryan Khan) கவனித்து வருவதால் ஷாருக்கான் தற்போது தனக்கென ஒரு புதிய மெய்க்காப்பாளரைத் தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரம், ஷாருகான் குடும்பத்தில் புயலை கிளப்பிய நிலையில் தற்போது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் ஷாருகான், விரைவில் தன்னுடைய படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
உண்மையில் கடந்த மாதம் ஷாருக் மற்றும் கௌரி கான் இருவருக்கும் மிகவும் சவாலான மாதமாகவே இருந்தது என்று கூறலாம், இவர்களுடைய செல்ல மகன் ஆர்யன் போதைப்பொருள் வழக்கில் NCB யால் கைது செய்யப்பட்டது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ஜாமீன் பெற முயன்றபோதும், ஜாமீன் கிடைக்காமல் சுமார் 25 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார் ஆர்யன் கான். பின்னர் உயர் நீதி மன்றத்தில் ஒருவழியாக ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்தது.
எனினும் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளின்படி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் (வெள்ளிக்கிழமை) மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ஷாருக் கான் இப்போது தனக்கென ஒரு புதிய மெய்க்காப்பாளரைத் தேடி வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதுவரை ஷாருகானுக்கு மெய் காப்பாளராக இருந்த ரவி சிங், தற்போது ஆர்யன் கான் வெளியில் செல்லும் போதெல்லாம் அவரைப் பாதுகாக்கும் படி நியமிக்கப்பட்டுள்ளாராம்.
ஆர்யனுக்கு ஒரு புதிய நபரை பணியமர்த்துவதற்கு பதிலாக, அவர் தனது பழைய மற்றும் நம்பகமான மெய்க்காப்பாளர் ரவி சிங்கை பணியமர்த்தியுள்ளார். எனவே தற்போது தனக்கான ஒரு புதிய மெய் காப்பாளரை தீவிரமாக தேடி வருகிறாராம் ஷாருகான்.
ரவி சிங் கான் குடும்பத்துடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார், மேலும் அவர் பாதுகாப்புத் தலைவராகவும் உள்ளார். ரவி சிங்கின் ஆண்டுக்கு சம்பளமாக 2.7 கோடி ரூபாய்க்கு மேல் பெருகிறாராம். அதாவது மாதத்திற்கு சுமார் 23 லட்சம் என கூறப்படுகிறது.