சூப்பர்ஸ்டார் பேரனுடன் ஷாருக்கான் மகள் காதல்...? தீயாய் பரவும் தகவல்
பாலிவுட் திரையுலகின் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவரின் மகள், இந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் பேரனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது பதான் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இதுதவிர இவர் கைவசம் ஜவான் திரைப்படமும் உள்ளது. இப்படத்தை அட்லீ இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்கிற மகனும், சுஹானா கான் என்கிற மகளும் உள்ளனர். இதில் ஆர்யன் கான் சமீபத்தில் போதை பொருள் வழக்கில் கைதாகி பின்னர் விடுதலை ஆனார். இவர் விரைவில் சினிமாவில் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். அதேபோல் ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... துணிவை விட ரூ.100 கோடி அதிக கலெக்ஷன்... ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையாடிய வாரிசு - முழு விவரம் இதோ
அவர் தி ஆர்ச்சீஸ் என்கிர திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் மூலம் அகஸ்தியா நந்தா ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகன் ஆவார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், சுஹானா கானும், அகஸ்தியா நந்தாவும் காதலித்து வருவதாக பாலிவுட்டில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. தி ஆர்ச்சீஸ் படத்தில் நடித்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது தற்போது காதலாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... Rajinikanth: நல்ல நண்பனை இழந்து விட்டேன்..! சுதாகர் உடலுக்கு கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.