கடைசியாக அணிந்த மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய சித்ரா..! ரசிகர்களை கலங்க வைத்த போட்டோஸ்!
First Published Jan 5, 2021, 1:55 PM IST
தொடர்ந்து சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது வரை ஏன்? எதற்காக சித்ரா இந்த முடிவை எடுத்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில் இவர் கடைசியாக மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த மாதம் டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் சித்ராவின் கணவர் ஹேமந்த், உறவினர்கள், நண்பர்கள், சக நடிகர், நடிகைகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது அனைவரும் அறிந்தது தான்.

சித்ராவை ஹேமந்த் தான் அடித்து கொன்றுவிட்டதாக அவருடைய தாயார் குற்றச்சாட்டி வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?