சேலை அழகில் சிலிர்க்க வைத்த நடிகை வித்யா பிரதீப்! வேற லெவல் போட்டோஸ்..!
நாயகி சீரியலில், குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வந்த வித்யா, பிரதீப் தற்போது திரைப்படங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் நிலையில், விதவிதமான சேலையில் மனதை வசீகரிக்கும் அழகில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ...
சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார்.
அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார்.
அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் நடித்து வந்தார்.
குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வரும் வித்யா பிரதீப்.
இருப்பினும் மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்த போது கொடுத்த ஹாட் கிளிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.
சீரியல் முடிந்த பின்னர் தற்போது தன்னுடைய கவனம் முழுவதையும் திரையுலகின் மீது திரும்பியுள்ளார்.
இவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகிறார் வித்யா.
மேலும் அவ்வப்போது மாடர்ன் உடை மற்றும் ஸ்டைலிஷ் புடவையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு கொஞ்சம் அதிகம்.
சேலை அழகில் இவரை பார்த்த ரசிகர்கள், தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.