முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் சீரியல் நடிகர் சாய் சக்திக்கு நடந்த இரண்டாவது திருமணம்..!
பிரபல சீரியல் நடிகர் சாய் சக்தி தன்னுடைய முதல் மனைவியை, சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட, ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சன் டிவியில், இயக்குனரும் நடிகருமான திருமுருகன் இயக்கிய , நாதஸ்வரம் சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானவர் சாய் சக்தி.
முதல் சீரியலிலேயே இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தது.
இதை தொடர்ந்து, விஜய் டிவி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில், நடிகை ஜூலியுடன் சேர்ந்து நடனமாடினார்.
பின்னர் ஒரு கட்டத்தில், சீரியல் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், குடும்ப கஷ்டத்தில் இருப்பதாக கூறி தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த பிரச்சனைகளுக்கு பின், இவருடைய மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக இவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
சமீப காலமாக சில சீரியல்கள் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார்.
இதை தொடர்ந்து சாய் சக்தி மீஞ்சூரை சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என கூறப்படுகிறது.
மேலும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சாய்சக்தியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைக்கண்ட ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்து கூறி வருகின்றனர்.