சீரியலில் மாமியாராக நடித்த நடிகையையே காதலித்து திருமணம் செய்த நடிகர்!
சீரியலில் மாமியார் - மருமகனா நடித்த இந்திரனீலும், மேகனாவும் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 20 வருடமாக குழந்தை இல்லாதது பற்றியும், தற்போது குழந்தையே வேண்டாம் என முடிவு செய்துள்ளது பற்றியும் கூறி உள்ளனர்.

இந்திரநீல் மற்றும் மோகனா ராமி ஜோடி
சமீபத்தில் தங்களின் 20 வருட திருமண நாளை கொண்டாடிய சீரியல் பிரபலங்களான, இந்திரனில் மற்றும் மோகனாவின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது. பிரபலமான சீரியல்ல மாமியார் மருமகனா நடிச்ச இந்த ஜோடி, நிஜ வாழ்க்கையில கணவன் மனைவியா மாறியவர்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆன போதிலும், இதுவரை குழந்தை இல்லாதது மிகவும் கஷ்டமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
1000 எபிசோடுகளை கடந்து ஓடிய சீரியல்:
இவர்கள் தெலுங்கில் மிகவும் பேமஸ் ஆன சக்ரவாகம் சீரியலில் தான் கணவர் இந்திரனில் மாமியாராக மேகனா ராமி நடித்திருப்பார். பல வருடம், 1000 எபிசோடுகளை கடந்து ஓடிய இந்த சீரியலின் டிஆர்பி எப்போதுமே டாப் 3-யில் மட்டுமே இருந்தது. இந்த சீரியல் முடிவுக்கு வந்த போது பல ரசிகர்கள் தங்களின் வருத்தத்தையும் தெரிவித்து வந்தனர்.
47 வயதில் அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி; சங்கீதாவுக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு - போட்டோஸ்!
டாப் TRP காரணமாக மீண்டும் இந்த சீரியல் ஒளிபரப்பானது:
அதே போல் கோவிட் சமயத்தில், இந்த சீரியல்மறு ஒளிபரப்பு செஞ்சபோது கூட... TRP-யில் நல்ல ரேட்டிங் கிடைத்தது. முதல் தடவை ஒளிபரப்பான போது சீரியலில் மாமியார் - மருமகனா இருந்த ஜோடி, 2வது தடவை மறு ஒளிபரப்பாகும் நேரத்துல, நிஜ வாழ்க்கையில கணவன் மனைவியா மாறிட்டாங்க. மாமியாரையே கல்யாணம் பண்ணிக்கிட்ட மருமகன்னு அப்போ நிறைய பேர் கிண்டல் செஞ்சதோடு... பல விமர்சனங்களையும் நடிகர் எதிர்கொண்டார்.
எதிர்ப்பை மீறி காதலில் ஒன்று சேர்ந்த ஜோடி:
நிஜ வாழ்க்கையிலயும் மேகனா ராமி, இந்திரனிலை விட வயசுல பெரியவர் தான். இவங்க கல்யாணத்துக்கு ரெண்டு குடும்பத்துலயும் சம்மதம் இல்ல. இந்திரனிலை விட மேகனா ஆறு மாசம் பெரியவங்க. சீரியல் படப்பிடிப்புல காதல்ல விழுந்த இந்த ஜோடிக்கு கல்யாணம் பண்ணிக்க நிறைய காலம் ஆச்சு. கடைசில பெரியவங்களை சம்மதிக்க வச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், இன்னும் இவங்களுக்கு குழந்தை இல்ல.
serial actorமேகனாவுக்கும் இந்திரனீலுக்கும் இப்போ 40 வயசு:
மேகனாவுக்கும் இந்திரனிலுக்கும் இப்போ 40 வயசுக்கு மேல ஆகுது. 'இப்போ நாங்க குழந்தை பெத்துக்கிட்டு அவங்களுக்கு கஷ்டம் கொடுக்க மாட்டோம்.. எங்களுக்கு வயசாயிடுச்சு.. காசு அவங்களுக்காக சம்பாதிக்கலாம் ஆனா எல்லாத்துலயும் அவங்க கூட இருக்க முடியாது. எங்களுக்கு இப்போ குழந்தை பிறந்தாலும் அவங்க வளர்ந்து நிற்கும்போது எங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆகிடும். அந்த சமயத்துல ஏதாவது நடந்தா யார் பார்த்துப்பாங்க. குழந்தைகள் ரோட்டுல நிப்பாங்க.. அதனால வயசுல எங்களுக்கு குழந்தை வேணாம்னு தோணல'ன்னு மேகனா சொல்லியிருக்காங்க.
சக்ரவாகம் சீரியலுக்கு முன்பே இருவரும் இணைந்து நடித்துள்ளனர்:
சக்ரவாகம் சீரியலுக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் காலச்சக்ரம் சீரியல்ல நடிச்சிருந்தாங்க. இந்த சீரியல்ல இந்திரனீலுக்கு மாற்றாந்தாயா மேகனா நடிச்சிருந்தாங்க. இந்த நேரத்துலதான் மேகனா மேல காதல்ல விழுந்த இந்திரனீல், மேகனா கிட்ட காதலை சொன்னாராம். அப்போ மேகனா இதை மறுத்துட்டாங்க. எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டமே இல்லன்னு இந்திரனில் கிட்ட சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம் இந்திரனீல் 9 தடவை என்கிட்ட காதலை சொன்னாருன்னு மேகனா சொல்லியிருக்காங்க. இந்த தகவல் இப்போ வெளியாகி இருக்கு.
அஜித் படத்தால் என் கேரியரே போச்சு; நம்பவைத்து ஏமாத்திட்டார் சிவா - நடிகை குமுறல்!